Home / விளையாட்டுச் செய்திகள் / முதல் முறையாக உலக கோப்பை வென்றது இங்கிலாந்து

முதல் முறையாக உலக கோப்பை வென்றது இங்கிலாந்து

லண்டன்: உலககோப்பையை முதல் முறையாக கைப்பற்றி இங்கிலாந்து அணி சாதனை படைத்தது.

இங்கிலாந்தில் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடந்தது. லண்டன் லார்ட்சில் நடந்த பைனலில் இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் பேட்டிங் தேர்வு செய்தார். இரு அணிகளிலும் மாற்றம் செய்யப்படவில்லை.

நிக்கோல்ஸ் அரை சதம்

நியூசிலாந்து அணிக்கு கப்டில், நிக்கோல்ஸ் ஜோடி துவக்கம் தந்தது. கப்டில் 19 ரன்களில் ஆட்டமிழந்தார். நிக்கோல்ஸ், கேப்டன் வில்லியம்சன் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பிளங்கட் பந்தில் வில்லியம்சன் (30) ஆட்டமிழந்தார். சிறப்பாக விளையாடிய நிக்கோல்ஸ் (55) அரை சதம் கடந்தார். மார்க் உட் ‘வேகத்தில்’ ராஸ் டெய்லர் (15) சிக்கினார். நீசம் (19), கிராண்ட்ஹோம் (16) நிலைக்கவில்லை. லதாம் (47) அரை சத வாய்ப்பை இழந்தார்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

நியூசிலாந்து அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 241 ரன்கள் எடுத்தது. சான்ட்னர் (5), பவுல்ட் (1) அவுட்டாகாமல் இருந்தனர். இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக வோக்ஸ், பிளங்கட் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். 242 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 241ரன்கள் எடுத்ததால், போட்டி டை ஆனது. இதனை தொடர்ந்து சூப்பர் ஓவர் அறிவிக்கப்பட்டது.

சூப்பர் ஓவர்

சூப்பர் ஓவரில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி, விக்கெட் இழப்பின்றி 15 ரன்கள் எடுத்தது. பின்னர் 16 ரன்கள் வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய நியூசிலாந்து அணி 6 பந்துகளில் 1 விக்கெட்டை இழந்து 15 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் சூப்பர் ஓவரும் சமனில் முடிந்தது. அதிக பவுண்டரி அடித்ததால், இங்கிலாந்து அணி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து இங்கிலாந்து அணி முதல்முறையாக உலக கோப்பையை வென்று சாதனை படைத்தது.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

தோனியின் ரன் அவுட்டை பார்த்து அதிர்ச்சியடைந்த இருவர் மாரடைப்பால் பலி!!

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் தோனியின் ரன் அவுட்டை பார்த்து, அதிர்ச்சியடைந்த கிரிக்கெட் ரசிகர் ஒருவர் மாரடைப்பால் ...

%d bloggers like this: