Home / உள்நாட்டு செய்திகள் / முகமாலையில் கண்ணிவெடி அகற்றும் பணிகளை ஆய்வு செய்யும் ஜப்பானிய அதிகாரிகள்!

முகமாலையில் கண்ணிவெடி அகற்றும் பணிகளை ஆய்வு செய்யும் ஜப்பானிய அதிகாரிகள்!

கிளிநொச்சி முகமாலைப் பகுதியில் ஜப்பான் அரசின் நிதியுதவியுடன் கண்ணிவெடி அகற்றும் பணிகளை ஜப்பானியத் தூதரக அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர்.

நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை அந்தப் பகுதிக்கு விஜயம் செய்த ஜப்பான் குழுவினர் கண்ணிவெடி அகற்றும் பணிகளை பார்வையிட்டதுடன், அங்குள் நிலைமைகள் குறித்தும் கலந்துரையாடியுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளிப் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட முகமாலை, வேம்பொடுகேணி, கிளாலி ஆகிய பகுதிகளில் நிலக்கண்ணிவெடி அகற்றும் பணி தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அத்தோடு ஜப்பான் அரசின் நிதியுதவியுடன் மனிதநேயக் கண்ணிவெடி அகற்றும் பிரிவான சார்ப் அமைப்பின் ஊடாக கண்ணிவெடி அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

LIKE-Facebook

 

 

About அகமுகிலன்

x

Check Also

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பாதுகாப்பு சோதனைக்கு தன்னியக்க இயந்திரம்!!

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்துக்கு வருபவர்களை பாதுகாப்புக்கா சோதனை செய்வதற்கு தன்னியக்க இயந்திரம் ஆலயத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. வடக்கு மாகாண ...

%d bloggers like this: