Home / பெண்மணிகளுக்காக / முகத்தை அழகாக்கிக் காட்டும் பியூட்டி அப்ஸ்!

முகத்தை அழகாக்கிக் காட்டும் பியூட்டி அப்ஸ்!

வெவ்வேறு வடிவங்களில் முகத்தை அழகாக்கிக் காட்டும் பியூட்டி அப்ஸ்(Beauty App) எனப்படும் செயலி ஒன்றை, கேயான்ஹங்(Keyanhan)தகவல் தொழில்நுட்ப நிறுவனமானது, முதன்முறையாக வட கொரியாவில் அறிமுகம் செய்யவுள்ளது.

வெவ்வேறு வடிவங்களில் முகத்தை அழகாக்கிக் காட்டும் கைபேசி செயலிகள் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், வட கொரியாவில் முதன்முறையாக போம்ஹயங்கி 1.0 பியூட்டி அப்ஸ் (Pomhayanki Beauty App 1.0) என்ற செயலியை, பயன்பாட்டாளர்களுக்காக மேற்படி நிறுவனமானது, வெளியிடவுள்ளது.

பயன்பாட்டாளர்களுக்கு எந்த விதமான ஒப்பனை பொருத்தமாக இருக்கும் என்பதை வேறுபட்ட தெரிவுகளைப் பயன்படுத்தி தெரிந்துகொள்ளும் வகையில், இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறது, இதனை உருவாக்கிய கேயான்ஹங் (Keyanhan)தகவல் தொழில்நுட்ப நிறுவனம்.

மேற்படி நிறுவனமானது, தங்களது செயலி ‘வட கொரிய பெண்களிடமிருந்து மிகவும் நல்லவிதமான கருத்துக்களைப் பெற்றுள்ளது’ என்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

About இனியவன்

x

Check Also

தொப்பையை மிக வேகமாக குறைக்க ஆயுர்வேத ரகசியம்!

உங்கள் எடை அதிகரித்துக் கொண்டே இருக்கிறதா? டயட் இருக்கலாம் நினைக்கிறீங்க.. ஆனா ஒரு வாரத்துக்கு மேல தாக்கு பிடிக்க முடியல. ...

%d bloggers like this: