Home / உள்நாட்டு செய்திகள் / மீண்டும் முஸ்லிம்களின் சொத்துக்கள் மீது தாக்குதல்கள்.

மீண்டும் முஸ்லிம்களின் சொத்துக்கள் மீது தாக்குதல்கள்.

ஆனமடுவ மற்றும் தர்கா நகர் ஆகிய பகுதிகளில் இன்று அதிகாலை முஸ்லிம்களுக்கு சொந்தமான ஹோட்டல் மற்றும் வீடொன்றின் மீது இரு வேறு பெற்றோல் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

குருணாகல் – புத்தளம் பிரதான வீதியில் ஆனமடுவ நகரில் அமைந்துள்ள மதீனா முஸ்லிம் ஹோட்டல் மீதும், அளுத்கம – தர்கா நகர், அதிகாரிகொடவில் உள்ள முஸ்லிம் ஒருவருக்கு சொந்தமான வீடொன்றின் மீதுமே இந்த குண்டுத்தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவங்களின் போது எவருக்கும் ஆபத்துக்கள் நேராத போதும் ஹோட்டலும், வீடும் முற்றாக தீக்கிரையாகி கடும் சொத்து சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் விஷேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்தனர்.

About இனியவன்

x

Check Also

மஸ்கெலியா நகரில் காணாமல் போன இளைஞன் நீரோடையில் சடலமாக மீட்பு!!!

மஸ்கெலியா நகரில் 19.02.2019 அன்று இரவு காணாமல் போன 30 வயதுடைய இளைஞன் இன்று காலை மவுஸ்ஸாக்கலை நீர்தேக்கத்திலிருந்து சடலமாக ...

%d bloggers like this: