Home / உலகச் செய்திகள் / மின்னல் தாக்கி 8 குழந்தைகள் உடல் கருகி பரிதாபமாக பலி-10 குழந்தைகள் படுகாயம்!!

மின்னல் தாக்கி 8 குழந்தைகள் உடல் கருகி பரிதாபமாக பலி-10 குழந்தைகள் படுகாயம்!!

பீகாரில் விளையாடிக் கொண்டிருந்தபோது மின்னல் தாக்கியதில் 8 குழந்தைகள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

பீகார் மாநிலத்தில் பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. இதனால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்து வருகின்றது.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

இந்நிலையில், அம்மாநிலத்தின் நவாடா மாவட்டத்தின் எல்லைக்குட்பட்ட தன்பூர் முஷஹரி கிராமத்தில் மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது அப்பகுதியில் உள்ள அரச மரத்தை சுற்றி 18 குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது தீடிரென மின்னல் தாக்கியது. இதில் 8 குழந்தைகள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 10 குழந்தைகள் படுகாயமடைந்தனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்த காவல் துறையினர்  படுகாயமடைந்த குழந்தைகளை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மின்னல் தாக்கி ஒரே கிராமத்தை சேர்ந்த 8 குழந்தைகள் உடல் கருகி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

55 கலைஞர்களை கொண்டு பென்சிலால் வரையப்பட்ட சுவரோவியம்-

அர்ஜெண்டினா எல்லைப்பகுதியில் 55 கலைஞர்களை கொண்டு பென்சிலால் வரையப்பட்ட சுவரோவியம் கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. அர்ஜெண்டினா – பராகுவே எல்லைப் ...

%d bloggers like this: