Home / உள்நாட்டு செய்திகள் / மின்னஞ்சல்களை கட்டுப்படுத்த நடவடிக்கை

மின்னஞ்சல்களை கட்டுப்படுத்த நடவடிக்கை

சமூக வலைத்தளங்களை முடக்கியமையால் பாரிய இனவாத மோதல்களை கட்டுப்படுத்த முடிந்ததாக பொலிஸ் திணைக்களம் அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளது.

கண்டி மற்றும் ஏனைய பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள இனவாத தாக்குதல்களைக் கட்டுப்படுத்துவதற்காக சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டன.

இந்த நடவடிக்கை வெற்றியளித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவின் தலமையில் அலரி மாளிகையில் நேற்று இடம்பெற்ற பாதுகாப்பு பிரதானிகளின் கூட்டத்தில் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெய சுந்தர இதனைத் தெரிவித்துள்ளார்.

கண்டி வன்முறைச் சம்பவம் ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் , பேஸ்புக் சமூக வலைத்தளங்களை கட்முப்படுத்தும் முறை தொடர்பில் ஜேர்மன் மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளிடம் காணப்படும் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது குறித்து பாதுகாப்பு பிரதானி பிரதமரிடம் சுட்டிக் காட்டியுள்ளார்.

இதற்கு மேலதிகமாக மின்னஞ்சல் மற்றும் இணையத்தளங்களின் கட்டுப்பாடுகளுக்கு சீனா பயன்படுத்தும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடலில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

About இனியவன்

x

Check Also

மஸ்கெலியா நகரில் காணாமல் போன இளைஞன் நீரோடையில் சடலமாக மீட்பு!!!

மஸ்கெலியா நகரில் 19.02.2019 அன்று இரவு காணாமல் போன 30 வயதுடைய இளைஞன் இன்று காலை மவுஸ்ஸாக்கலை நீர்தேக்கத்திலிருந்து சடலமாக ...

%d bloggers like this: