Home / விளையாட்டுச் செய்திகள் / மறக்கமுடியாத உலகக் கிண்ண சர்ச்சைகள்: ஒருபந்தில் 22 ஓட்டங்கள்

மறக்கமுடியாத உலகக் கிண்ண சர்ச்சைகள்: ஒருபந்தில் 22 ஓட்டங்கள்

எந்த ஒரு போட்டித்தொடர் முடிவடையும் போதும் இதில் சில சலசலப்புகள், சர்ச்சைகள் இருப்பது இயல்புதான். அதில் ஐசிசி நடத்திய உலகக்கிண்ணப் போட்டியும் விதிவிலக்கல்ல.

அவுஸ்திரேலியா, நியூசிலாந்தில் 1992 ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டி நடந்தது. நிறவெறித்தடையில் இருந்து வந்திருந்த தென் ஆப்பிரிக்க அணி சந்தித்த முதல் உலகக் கிண்ணம் இதுவாக இருந்தது.

 

வலுவான அணியாக இருந்த தென் ஆப்பிரிக்க அரையிறுதியில் இங்கிலாந்து அணியைச் சந்தித்தது. தென் ஆப்பிரிக்க அணி வெற்றிக்கு 13 பந்துகளில் 22 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில், மழை குறுக்கிட்டது.

மழை நின்றபின் மீண்டும் தென் ஆப்பிரிக்க துடுப்பாட்ட வீரர்கள் களத்துக்கு வந்தபோது 7 பந்துகளுக்கு 22 ஓட்டங்கள் என்ற கணக்கீடு வந்தது.

ஆனால், மீண்டும் மழை குறுக்கிடவே டக்வொர்த் லீவிஸ் முறைப்படி ஒருபந்தில் 22 ஓட்டங்கள் அடிக்க நிர்ணயிக்கப்பட்டது.

சாத்தியமில்லாத இந்த இலக்கால் தென் ஆப்பிரிக்க அணி வேதனையுடன் வெளியேறியது. ஆனால், அடுத்த சிறிதுநேரத்தில் 2 மணிநேரம் வெயில் வெளுத்து வாங்கியது நினைவுக்கூரத்தக்கது.

About இனியவன்

x

Check Also

தோனியின் ரன் அவுட்டை பார்த்து அதிர்ச்சியடைந்த இருவர் மாரடைப்பால் பலி!!

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் தோனியின் ரன் அவுட்டை பார்த்து, அதிர்ச்சியடைந்த கிரிக்கெட் ரசிகர் ஒருவர் மாரடைப்பால் ...

%d bloggers like this: