Home / இந்திய செய்திகள் / மர்ம நோயால் பாதிக்கப்பட்டு ஒரே நாளில் 6 குழந்தைகள் உயிரிழப்பு!!

மர்ம நோயால் பாதிக்கப்பட்டு ஒரே நாளில் 6 குழந்தைகள் உயிரிழப்பு!!

பீகாரில் மர்ம நோயால் தாக்கப்பட்டு ஒரே நாளில் 6 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பீகாரின் முசாபர்பூர் மாவட்டத்தில் கடந்த மாதம் மூளைக்காய்ச்சல் தாக்கியதில் ஏறத்தாழ 100 குழந்தைகள் உயிரிழந்தனர். இந்தப் பாதிப்பிலிருந்து அம்மாநில நிர்வாகம் மீண்டு வருவதற்குள் கயாவில் உள்ள அனுராக் நாராயண் மகத் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மர்ம நோயால் பாதிக்கப்பட்டிருந்த 22 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

Image result for பீகாரில் மர்ம நோயின் தாக்குதலுக்கு

இந்தக் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று ஒரே நாளில் அடுத்தடுத்து 6 குழந்தைகள் உயிரிழந்தனர். இதையடுத்து பாட்னாவில் இருந்து விஷேச மருத்துவக் குழுவினர் கயாவிற்கு விரைந்துள்ளனர். மேலும் மர்ம நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சையை மேலும் தீவிரப்படுத்த பீகார் அரசு உத்தரவிட்டுள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE   

 

About இனியவன்

x

Check Also

மகாத்மா காந்தியின் 150 வது பிறந்தநாளை முன்னிட்டு காந்தி நினைவிடத்தில் மோடி, தலைவர்கள் மரியாதை

புதுடில்லி : மகாத்மா காந்தியின் 150 வது பிறந்தநாளை முன்னிட்டு டில்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை ...

%d bloggers like this: