Home / உள்நாட்டு செய்திகள் / மரபணு பரிசோதனை அறிக்கையை அடுத்த வாரம் வௌியிடுவதற்குத் தீர்மானம்!!

மரபணு பரிசோதனை அறிக்கையை அடுத்த வாரம் வௌியிடுவதற்குத் தீர்மானம்!!

கல்முனை – சாய்ந்தமருது தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடற்பாகங்களிலிருந்து பெறப்பட்ட மாதிரிகளின் மரபணு பரிசோதனை அறிக்கையை அடுத்த வாரம் வௌியிடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த சடலங்களிலிலிருந்து பெறப்பட்ட மரபணு மாதிரிகள் பழுதடைந்தமையால், புதிய மாதிரிகளை பெறுவதற்காக சடலங்கள் மீண்டும் தோண்டப்பட்டதாக அரச இரசாயன பகுப்பாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில், குறித்த மாதிரிகள், நேற்று முன்தினம் சட்ட வைத்திய அதிகாரிகளூடாக அரச இரசாயனத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டன.

குறித்த மரபணு பரிசோதனை அறிக்கை நீதிமன்றம் மற்றும் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

தற்கொலை குண்டுத்தாக்குதலை நடத்திய சஹ்ரானின் உறவினர்களை இந்த மரபணு பரிசோதனை அறிக்கையினூடாக அறிந்து கொள்ள முடியும் என அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பாதுகாப்பு சோதனைக்கு தன்னியக்க இயந்திரம்!!

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்துக்கு வருபவர்களை பாதுகாப்புக்கா சோதனை செய்வதற்கு தன்னியக்க இயந்திரம் ஆலயத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. வடக்கு மாகாண ...

%d bloggers like this: