Home / உள்நாட்டு செய்திகள் / மன்னார் மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் விழிப்புணர்வு நடைபவனி

மன்னார் மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் விழிப்புணர்வு நடைபவனி

வட மாகாண ஆளுநரின் வழிநடத்தலில் ஆரம்பமான வீதிப்பாதுகாப்பு வாரத்தினை முன்னிட்டு நேற்று (11) காலை மன்னார் மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் விழிப்புணர்வு நடைபவனி இடம்பெற்றது.

மாந்தை மேற்கு பிரதேச செயலக உதவி பிரதேசச் செயலாளர் எஸ்.ஜெசிந்தன் தலைமையில் மாவட்ட செயலகத்தில் ஆரம்பமான குறித்த நடைபவனி, மன்னார் பஸார் பகுதியூடாக சென்று மீண்டும் மன்னார் மாவட்டச் செயலகத்தை வந்தடைந்தது.

குறித்த நடைபவனியில், மன்னார் மாவட்ட செயலக அதிகாரிகள் பணியாளர்கள் உட்பட திணைக்கள பணியாளர்களும் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து மாவட்டச் செயலகத்தில் வீதிபாதுகாப்பு உறுதி மொழியையும் அதிகாரிகள் வழங்கினர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE   

About இனியவன்

x

Check Also

ரயில் சேவை தொடர்பில் மீளாய்வு செய்ய குழு

ரயில் சேவை தொடர்பில் மீளாய்வு செய்வதற்கான குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக ரயில் போக்குவரத்து சேவை அமைச்சர் C.B. ரத்னாயக்க தெரிவித்துள்ளார். ரயில் ...

%d bloggers like this: