Home / உள்நாட்டு செய்திகள் / மன்னார் மனிதப் புதைகுழியில் சந்தேகத்துக்கு இடமான மனித எலும்புக்கூடு மீட்பு!!

மன்னார் மனிதப் புதைகுழியில் சந்தேகத்துக்கு இடமான மனித எலும்புக்கூடு மீட்பு!!

மன்னார் மனிதப் புதைகுழி அகழ்வு பணிகளின் போது சந்தேகத்துக்கு இடமான சிறு மனித எலும்புக்கூடு இன்று மீட்கப்பட்டுள்ளது.

மன்னார் மனிதப் புதைகுழி அகழ்வு பணியானது இன்று 145 ஆவது தடவையாக முன்னெடுக்கப்பட்டது.

மனிதப் புதைகுழியில் தொடர்ச்சியாகவும் மனித எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டும் அப்புறப்படுத்தப்பட்டும் வருகின்றன.

இன்றைய தினம் சந்தேகத்திற்கு இடமான சிறு பிள்ளை ஒன்றின் மனித எலும்புக்கூடு மீட்க்கப்பட்டுள்ளது .

குறித்த மனித எலும்புக்கூட்டின் அருகில் உலோக பொருள் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தற்போது குறித்த சிறு மனித எலும்புக்கூடு முழுமையாக மீட்கப்பட்டு சுத்தப்படுத்துவதற்காக மத்திய பகுதியில் வைக்கப்பட்டுள்ளது.

குறித்த எலும்புக்கூடு 18 வயதுக்குற்பட்ட சிறுவருடையது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் இது குறித்த மனித புதைகுழியில் 316 மனித எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன் 307 மேற்ப்பட்ட மனித எச்சங்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

LIKE-Facebook

 

 

About அகமுகிலன்

x

Check Also

படைப்புழுவை கட்டுப்படுத்த மன்­னார் மாவட்டத்­தில் விழிப்புணர்வுக் கருத்தரங்கு!!

மன்­னார் மாவட்டத்­தில் படைப்­பு­ழு­வைக் கட்­டுப்­ப­டுத்­து­தல் தொடர்­பான கருத்­த­ரங்கு  மாவட்ட செய­ல­கத்­தின் கேட்­போர் கூடத்­தில் மாவட்ட செய­லர் சி.ஏ. மோகன்­றாஸ் தலை­மை­யில் ...

%d bloggers like this: