Home / உள்நாட்டு செய்திகள் / மஞ்சளுடன் இருவர் கைது

மஞ்சளுடன் இருவர் கைது

சட்டவிரோதமாக கடல் மார்க்கமான நாட்டுக்கு கொண்டுவர முட்பட்ட 818 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் தொகையுடன் இரண்டு சந்தேக நபர்கள் நேற்று கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.

வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினர் மன்னார் வடக்கு கடல் பகுதியில் நடத்திய சிறப்பு நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக கடல் வழியாக இந்நாட்டுக்கு கொண்டு வர முட்பட்ட 12 சாக்குகளில் அடைத்து வைக்கப்பட்ட 510 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சளுடன் இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதன்போது சந்தேக நபர்களுடன் ஒரு டிங்கி படகும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

மேலும் மன்னார் வன்காலே பகுதியில் நடத்திய ஒரு சிறப்பு நடவடிக்கையின் போது, கடற்கரையில் கைவிடப்பட்ட 5 சாக்குகளில் 308 கிலோகிராம் மஞ்சளை கடற்படை பறிமுதல் செய்தது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர்கள் 26 முதல் 37 வயதுக்குட்பட்ட மன்னார் பல்லெமுனை பகுதியில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பின்னர், அவர்கள் தனிமைப்படுத்தும் பணிக்காக தலைமன்னார் பொது சுகாதார ஆய்வாளரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

About இனியவன்

x

Check Also

மஞ்சள் தூளின் அதிகபட்ச சில்லறை விலை

மஞ்சள் தூள் கிலோ ஒன்றுக்கான அதிக பட்ச சில்லறை விலையை நிர்ணயம் செய்து வெளியிடப்பட்டிருந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் இரத்துச் ...