Home / உள்நாட்டு செய்திகள் / பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு கிடைத்துள்ள மகிழ்ச்சியான செய்தி!

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு கிடைத்துள்ள மகிழ்ச்சியான செய்தி!

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அவர்களது நாளாந்த வேதனத்தில் அரசாங்கத்தின் நிவாரண நிதியாக 50 ரூபாவை இணைப்பதற்கு கொள்கை ரீதியாக இணங்கப்பட்டுள்ளது.

ஒரு வருடக் காலப்பகுதிக்கு மாத்திரம் இந்த கொடுப்பனவு வழங்கப்படும் என்று பெருந்தோட்டக் கைத்தொழில் துறை அமைச்சர் நவீன் திஸாநாயக்க தேயிலை சபையில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.

தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் பெருந்தோட்டத்தொழிலாளர்களது வேதனம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. இதற்கு அமைவாக நாளாந்தம் 50 ரூபாவை பெருந்தோட்டத் தொழிலளார்களது வேதனத்துடன் இணைத்து வழங்குவதற்கு அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.

மேலும் தேயிலை சபையின் நிதியில் இருந்து இதற்காக 1.2 பில்லியன் ரூபாய் கடன் அடிப்படையில் ஒதுக்கப்படும் என்றும், பின்னர் இந்த கடனை அரசாங்கம் பின்னர் தேயிலை சபைக்கு செலுத்தும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இதற்கான அமைச்சரவை யோசனையை எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் தாக்கல் செய்ய இணங்கி இருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

LIKE-Facebook

 

About அகமுகிலன்

x

Check Also

சத்தியமூர்த்தியின் நினைவு நாளை முன்னிட்டு ”நினைவுகளுடன் பேசுதல்” நூல் வெளியீட்டு விழா!!

யாழ். இந்துக் கல்லூரியின் மைந்தனும் ஊடகவியலாளருமான பு.சத்தியமூர்த்தியின் 10 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு “நினைவுகளுடன் பேசுதல்” நூல் ...

%d bloggers like this: