Home / இந்திய செய்திகள் / பெட்ரோல்- டீசல் விலை உயர்வு

பெட்ரோல்- டீசல் விலை உயர்வு

பட்ஜெட் அறிவிப்பைத் தொடர்ந்து, பெட்ரோல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 56 காசுகளும், டீசல் விலை 2 ரூபாய் 52 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் நேற்று நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்து பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான சிறப்பு கலால் வரி லிட்டருக்கு ஒரு ரூபாய் அதிகரிக்கப்படுவதாக அறிவித்தார். தற்போது, கச்சா எண்ணெய் விலை குறைந்திருப்பதால், கலால் வரியை உயர்த்தும் வாய்ப்பு கிடைத்திருப்பதாக அவர் தெரிவித்தார்.இதனைத் தொடர்ந்து நள்ளிரவு முதல் விலை உயர்வு அமலுக்கு வந்தது.

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 57 காசுகள் உயர்த்தப்பட்டு 75 ரூபாய் 76 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 52 காசுகள் அதிகரித்து 70 ரூபாய் 48 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. சாலை உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பெட்ரோல், டீசலுக்கு ஒரு லிட்டருக்கு ரூ.2 கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளது.

இந்த விலை உயர்வுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வரும் நிலையில், அதன் பலனை நுகர்வோருக்கு அளிக்காமல் மத்திய அரசு விலையை உயர்த்தியிருப்பதாக காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

பிரதமர் மோடிக்கு தனது பாடல் ஆல்பத்தை நேரில் சென்று அர்ப்பணித்த பாடகி!!

குஜராத் நாட்டுப்புறப் பாடகி கீதா ரபரி பிரதமர் மோடிக்கு தனது பாடல் ஆல்பத்தை நேரில் சென்று அர்ப்பணித்தார். இதனையடுத்து அவரை ...

%d bloggers like this: