Home / உள்நாட்டு செய்திகள் / புது டில்லியைச் சென்றடைந்தார் ஜனாதிபதி!

புது டில்லியைச் சென்றடைந்தார் ஜனாதிபதி!

இந்தியாவில் புது டில்லி நகரத்தில் நாளை 11 ஆரம்பமாகும் சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பின் ஆரம்ப நிகழ்வில் பங்குபற்றுவதற்காக இந்தியாவுக்கு புறப்பட்டுச் சென்ற ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேன  இன்று  பிற்பகல் புது டில்லி இந்திராகாந்தி விமான நிலையத்தை சென்றடைந்தார்.

இந்திய வெளிவிவகார அமைச்சின் மேற்கு பிராந்தியத்திற்கு பொறுப்பான செயலாளர் திருமதி ருச்சிகன் ஷாம் விமான நிலையத்தில் வைத்து ஜனாதிபதியை வரவேற்றார்.

இலங்கைக்கான இந்திய தூதுவர் தரங்ஜித் சிங் மற்றும் இந்தியாவுக்கான இலங்கை தூதுவர் திருமதி சித்ராங்கனி வாகீஸ்வர ஆகியோர் இந்நிகழ்வில் இணைந்து கொண்டனர்.

ஜனாதிபதி  தங்கியுள்ள தாஜ் விடுதியில் தூதரக அதிகாரிகள் ஜனாதிபதியை வரவேற்றனர்.

ஜனாதிபதியின்  இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவும் இணைந்துள்ளார்.

 

About இனியவன்

x

Check Also

போட்டுப் பிடிக்கும் சிங்கள தேசம்.. கொலைவெறித் தாக்குதலை ஊக்குவிக்க ஹெலிகொப்டரில் வந்த மஹிந்த

பாராளுமன்றில் இன்று மஹிந்த ராஜபக்ஷவின் கொலைவெறி கொண்ட குழுவினர் அராஜகமாக நடந்துகொண்டதை, மேலும் ஊக்குவிப்பதற்காக மஹிந்த ராஜபக்ஷ அவசரமாக பாராளுமன்றுக்கு ...

%d bloggers like this: