Home / உள்நாட்டு செய்திகள் / பிஸ்கட் சாப்பிட்ட பாடசாலை மாணவிகள் மயக்கம்!

பிஸ்கட் சாப்பிட்ட பாடசாலை மாணவிகள் மயக்கம்!

கிளிநொச்சி, கந்தபுரம்- 2 பாடசாலையில் கல்வி கற்கும் மாணவிகள் மூவர் பிஸ்கட் உண்ட பின்னர் மயங்கி விழுந்த நிலையில் அக்கராயன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பாடசாலையில் இன்று முற்பகல் 10.45 மணி அளவில் மூன்று மாணவிகள் மயக்கமடைந்துள்ளனர்.

மாணவிகள் பாடசாலை வழியில் உள்ள கடையொன்றில் பிஸ்கட் வாங்கியுள்ளதுடன், அதை சாப்பிட்ட சில விநாடிகளில் மயங்கி விழுந்துள்ளனர்.

விரைந்து செயற்பட்ட ஆசிரியர்கள், அவசர நோயாளர் காவு வண்டிக்கு அழைப்பினை மேற்கொண்டு மாணவிகள் மூவரையும் அக்காராயன் மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பாடசாலை மாணவிகளில் ஒருவர் தரம் ஏழிலும் மற்றைய இருவர் தரம் மூன்றிலும் கல்வி கற்பதாகவும், தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

About Tharshi

x

Check Also

சற்றுநேரத்தில் புதிய பிரதமரின் விசேட உரை

புதிய பிரதமராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிஙக மீண்டும் பிரதமராக பதவியேற்றதைத் தொடர்ந்து ஐக்கிய தேசிய முன்னணியினர் ...

%d bloggers like this: