Home / உலகச் செய்திகள் / பிரான்ஸில் பாரிய வெடிப்பு பலர் காயம் காணொளி உள்ளே

பிரான்ஸில் பாரிய வெடிப்பு பலர் காயம் காணொளி உள்ளே

பிரான்ஸில்  பேக்கரி ஒன்றில் இடம்பெற்ற பாரிய வெடிப்பு சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளர். இந்த வெடிப்பு சம்பவம் எரிவாயு கசிவு காரணமாக  இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் வடக்கு மத்திய பரிஸில் சற்று முன்னர் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. பலர் சம்பவத்தில் காயமடைந்த போதிலும் உயிரிழப்புகள் எதுவும் இதுவரை பதிவாகவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு பிரிவினர் போராடிக் கொண்டிருப்பதாக பொலிஸ் தலைமை அதிகாரி குறிப்பிட்டுள்ளார். ஒரு முழுமையான கட்டடம் இந்த சம்பவத்தினால் சேதமடைந்துள்ளதுடன் குறித்த பகுதியில் வாகன நெரிசல்களும் ஏற்பட்டுள்ளது.

 

 

 

About அகமுகிலன்

x

Check Also

நிலநிடுக்கத்தால் பலத்த சேதமடைந்த கேமரினோ நகருக்கு சென்ற போப் ஆண்டவர்

இத்தாலியில் நிலநிடுக்கத்தால் பலத்த சேதமடைந்த கேமரினோ நகருக்கு சென்ற போப் ஆண்டவர், ஆலய திருப்பலியில் கலந்து கொண்டார். இத்தாலியின் மத்திய ...

%d bloggers like this: