Home / உலகச் செய்திகள் / பிரம்மாண்டமாக தொடங்கிய தாய்லாந்து நாட்டின் புதிய மன்னரின் முடிசூட்டு விழா

பிரம்மாண்டமாக தொடங்கிய தாய்லாந்து நாட்டின் புதிய மன்னரின் முடிசூட்டு விழா

தாய்லாந்தின் புதிய மன்னராக மஹா வஜ்ரலங்கோனுக்கு முடி சூட்டப்பட்டது.  தாய்லாந்து நாட்டின் வழக்கப்படி, மூன்று நாட்கள் நடைபெறும் இந்த முடிசூட்டு விழா பிரம்மாண்டமாக தொடங்கியது.

முதலாவதாக வெள்ளை உடையில் தோன்றிய மன்னருக்கு, நாட்டின் பல புன்னிய தீர்த்தங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரைக் கொண்டு தலைமை புத்த துறவி, நன்னீராட்டு செய்து வைத்தார். பின்னர் பௌத்த மற்றும் பிராமண முறைப்படி சடங்குகள் மேற்கொள்ளப்பட்டன.

இதையடுத்து அரச குடையின் கீழ் அரியணையில் அமரவைக்கப்பட்ட மன்னருக்கு, இந்தியாவிலிருந்து தருவித்த வைரத்தால் அலங்கரிப்பட்ட சுமார் 7.3 கிலோ தங்கத்தினால் ஆன மணிமுடி சூட்டப்பட்டது. தொடர்ந்து இரு தினங்களுக்கு முன்பு மணமுடித்த மன்னரின் மனைவியும், நாட்டின் ராணியுமான சுதிடா, மன்னருக்கு மரியாதை செலுத்தினார். இந்த முடிசூட்டு விழா வைபவத்தையொட்டி, அரண்மனைக்குள் பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | இளவரசர் ஹரி, மேகன் அரச குடும்ப உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவிப்பு!!

பிரிட்டன் அரச குடும்ப உறுப்பினர் பொறுப்பில் இருந்து  இளவரசர் ஹரியும், அவரது மனைவி மேகனும் விலகுவதாக, பக்கிங்ஹாம் அரண்மனை அதிகாரபூர்வமாக ...

%d bloggers like this: