Home / உள்நாட்டு செய்திகள் / அரச வீட்டுத் திட்டத்தில் தெரிவானோருக்கு பிரதேச செய­லகம் விடுத்துள்ள அறிவிப்பு!

அரச வீட்டுத் திட்டத்தில் தெரிவானோருக்கு பிரதேச செய­லகம் விடுத்துள்ள அறிவிப்பு!

அரச வீட்டுத் திட்டத்தில் தெரிவானோர், புதிதாக வீடுகள் கட்டும்போது வீட்டுக் கூரைக்கான பனைமரங்களுக்குப் பதிலாக மாற்று மரங்களையும், கட்டட வேலைகளுக்குப் பாலியாற்று மணலையும் பூச்சு வேலைக்கு நாகர்கோவில் மணலையும் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் தென்­ம­ராட்­சி­யில் வீட­மைப்­புத் திட்­டத்­துக்­குத் தெரி­வு­செய்­யப்­பட்ட 165 பய­னா­ளி­க­ளு­ட­னான சந்­திப்பு பிர­தேச செய­லக மண்­ட­பத்­தில் நேற்று நடை­பெற்­றது. அதில் பிர­தேச செய­லர் திரு­மதி தேவந்­தினி பாபு தெரிவித்துள்ளார்.

பனை மரங்­க­ளையே வீட்­டுக் கூரை­க­ளுக்கு அதி­க­மா­னோர் பயன்­ப­டுத்­து­கின்­ற­னர். பனை வளம் அழிந்­து­போ­கா­மல் இருக்கப் பனைக்­குப் பதி­லாக மாற்று மரங்­க­ளைப் பயன்­ப­டுத்த வேண்­டும்.

ஒரே நேரத்­தில் 165 பேருக்கு வீட்­டுத் திட்­டம் கிடைத்­த­தால் அவ­ச­ரப்­ப­டா­மல் மூலப் பொருள்­க­ளைக் கொள்­வ­னவு செய்து பயன்­ப­டுத்­துங்­கள்.
எல்லோரும் ஒரே நேரத்­தில் மூலப் பொருள்­க­ளைக் கொள்­வ­னவு செய்ய முற்­ப­டும் போது விலை­கள் அதி­க­ரித்துச் செலவு அதி­க­ரிக்க வாய்ப்­புள்­ளது. பிர­தே­சத்­தில் மணல் வளம் குறை­வ­டைந்­துள்­ளது.

அத்தோடு கட்­டட வேலை­க­ளுக்­குப் பாலி­யாற்று மண­லை­யும் பூச்சு வேலைக்கு நாகர்­கோ­வில் மணலை பயன்­ப­டுத்­த­வும். மூன்று மாதங்­க­ளுக்­குள் கட்­டட வேலை­கள் பூர்த்தி செய்­யப்­ப­டல் வேண்­டும்.

ஒவ்­வொரு பய­னா­ளி­யும் பிர­தேச செய­ல­கத்­து­டன் ஒத்­த­ழைத்து வீட்­டுத்­திட்­டம் மிக சிறப்­பாக அமைய பாடு­ப­டல் வேண்­டும். ஒவ்­வொரு கட்­டட வேலை­க­ளின் பின்­னரே நிதி 5 கட்­டங்­க­ளாக வழங்­கப்­ப­டும்.

பய­னா­ளி­கள் வீடு­கள் அமைக்க முன்­னர் உள்­ளூ­ராட்­சிச் சட்­டங்­க­ளுக்கு அமை­வா­கக் கட்­ட­டம் அமைப்­ப­தற்குத் தங்­கள் பகு­தி­யில் உள்ள சாவ­கச்­சேரி நக­ர­சபை, சாவ­கச்­சே­ரிப் பிர­தேச சபை போன்­ற­வற்­றில் உரிய கட்­டட விண்­ணப்­பங்­களைப் பெற்று அவர்­க­ளால் கோரப்­ப­டுகின்ற விட­யங்­க­ளைக் கைய­ளித்து அங்­கீ­கா­ரம் பெற வேண்­டும்.

மேலும் பிர­தேச செய­லக அலு­வ­லர்­கள் எந்­த­நே­ர­மும் தங்­க­ளுக்கு வழி­காட்­ட­வும் ஆலோ­ச­னை­கள் வழங்­க­வும் தயா­ராக இருப்­பார்­கள். வீட­மைப்­புத் தொடர்­பில் பிரச்­சினை காணப்­ப­டின் பிர­தேச செய­ல­கத்­து­டன் தொடர்பு கொள்­ளுங்­கள் என்­றார்.

வீட்­டுத் திட்­டத்­தில் யாழ்ப்­பாண மாவட்­டத்­தில் தெரிவு செய்தவர்களில்  முதற்­கட்­ட­மாக ஆயி­ரத்து 500 பேருக்­கும், அதே­வேளை வடக்கு, கிழக்கு மாகா­ணங்­க­ளில் 4 ஆயி­ரத்து 500 பேருக்­கும் வீடு­கள் வழங்க அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளது. வீடு கட்­டும் பணி­கள் உத்­தி­யோ­க­பூர்­வ­மா­கக் கடந்த தைப் பொங்­க­லு­டன் ஆரம்பித்துள்ளது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

LIKE-Facebook

 

About அகமுகிலன்

x

Check Also

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பாதுகாப்பு சோதனைக்கு தன்னியக்க இயந்திரம்!!

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்துக்கு வருபவர்களை பாதுகாப்புக்கா சோதனை செய்வதற்கு தன்னியக்க இயந்திரம் ஆலயத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. வடக்கு மாகாண ...

%d bloggers like this: