Home / உள்நாட்டு செய்திகள் / பாலிதவை விடுதலை செய்யக் கோரி கவனயீர்ப்பு போராட்டம்!!

பாலிதவை விடுதலை செய்யக் கோரி கவனயீர்ப்பு போராட்டம்!!

களுத்துறையில் தமிழ்த் தோட்டத் தொழிலாளி ஒருவரின் சடலத்தை நீதிமன்ற உத்தரவை மீறி காணி ஒன்றில் பலவந்தமாக புதைத்த வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தேவரபெரும மற்றும் ஐவரை விடுதலை செய்யக் கோரி ஹட்டன் – என்பீல்ட், நோனா தோட்டத்தில் இன்று காலை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று மலையக தன்னெழுச்சி இளைஞர்களின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டது.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

குறித்த கவனயீர்ப்பு போராட்டமானது நோனாத் தோட்டத்தில் ஸ்ரீ செல்வ விநாயக ஆலயத்திற்கு முன்பாக பதாதைகளை ஏந்தியவண்ணம் காலை 11 மணியளவில் இடம்பெற்றது.

இதன் போது உண்மையாக சேவை செய்யும் தலைவர்களை இணங்காண்போம், ஏமாற்றுத் தலைவர்களை வெளியேற்றுவோம், பாலித விடுதலைக்கு இறை ஆசி வேண்டி பூஜை செய்வோம் போன்ற பதாதைகளை ஆர்ப்பாட்டகாரர்கள் ஏந்தியிருந்தனர்.

இந்த ஆர்பாட்டத்தின் போது ஐம்பதற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு செல்வ விநாயகர் ஆலயத்தில் சிறது தேங்காய்கள் உடைத்து விசேட பூஜைகளிலும் ஈடுப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

வெலிகந்த – அசேலபுர பகுதியில் மூன்று யானைகள் ரயிலுடன் மோதி விபத்து..!!

மட்டக்களப்பு மற்றும் கொழும்பிற்கு இடையிலான ரயில் மார்க்கத்தின் அசேலபுர பிரதேசத்தில் மூன்று யானைகள் ரயிலுடன் மோதியுள்ளன. ரயில் என்ஜினில் அகப்பட்டு ...

%d bloggers like this: