Home / உள்நாட்டு செய்திகள் / பாதுகாப்பு படையினரின் சீருடைகளுடன் ஒருவர் கைது!!

பாதுகாப்பு படையினரின் சீருடைகளுடன் ஒருவர் கைது!!

வத்தளை பிரதேசத்தில் சிவில் பாதுகாப்பு படையினர் அணியும் பெருந்தொகையான சீருடைகளுடன் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வத்தளையில் அமைக்கப்பட்டுள்ள வீதி தடைக்கு அருகில் நேற்றிரவு (03) நீர்கொழும்பு திசையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த லொறியொன்றை கடற்படையினர் மற்றும் பொலிஸார் சோதனையிட்டுள்ளனர்.

இதன்போதே குறித்த சீருடைகள் லொறியில் காணப்பட்டதாகவும், இது தொடர்பில் லொறி சாரதியிடம் விசாரணை மேற்கொண்டபோது அவர் தகுந்த பதில் அளிக்கத்தவறியதால் சந்தேக அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

கிளிநொச்சியில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!!

கிளிநொச்சியில் பெய்து வரும் கன மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சிவபுரம், இரத்தினபுரம், ...

%d bloggers like this: