Home / உள்நாட்டு செய்திகள் / பாடசாலையொன்றில் வெடி குண்டு : பாரிய சோதனை நடவடிக்கை முன்னெடுப்பு

பாடசாலையொன்றில் வெடி குண்டு : பாரிய சோதனை நடவடிக்கை முன்னெடுப்பு

நீர்கொழும்பின் பிரபல மகளிர் பாடசாலையொன்றினுள் குண்டு வைக்கப்பட்டுள்ளதாக கிடைக்கப் பெற்ற அநாமதேய தொலைபேசி அழைப்பொன்றினால் பாடசாலையினுள் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

குறித்த அழைப்புக்கு பின்னர் 20 நிமிடத்திற்குள் குறித்த பாடசாலையிலிருந்த மாணவிகளை அங்கிருந்து வௌியேற்றுவதற்கு பாடசாலை நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

குறித்த தொலைபேசி அழைப்பிற்கு பின்னர் விமானப் படையினர், இராணுவத்தின் குண்டுகளை செயலிழக்கச் செய்யும் பிரிவினர், காவல்துறையினர் மற்றும் புலனாய்வுத் துறையினரும் பாடசாலையில் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

பாடசாலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றை குழப்புவதற்காகவே இந்த அழைப்பு மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டனர்.

குறித்த பாடசாலையில் 3 ஆயிரம் மாணவிகள் கல்வி கற்பதுடன், நீர்கொழும்பு மேல்நீதிமன்றம் அந்தப் பாடசாலைக்கு அருகில் அமைந்துள்ளது.

எவ்வாறாயினும் குறித்த பாடசாலையின் நுழைவாயிலுக்கருகிலிருந்து சந்தேகத்திற்கிடமாக ஒருவர் வௌியேறுவது சிசிரிவியினூடாக தெரியவந்துள்ளது.

பாடசாலைக்கு அருகில் தற்போது காவல்துறையினர் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதுடன் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை நடாத்தி வருகின்றனர்.

 

About இனியவன்

x

Check Also

ராஜிதவிற்கு எதிராக ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பிய அரசாங்க வைத்திய அதிகாரிகள்

சுகாதார அமைச்சராக மீண்டும் ராஜித்த சேனாரத்னவை நியமிக்க கூடாது என ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கடந்த சில வருடங்களாக ...

%d bloggers like this: