Home / உள்நாட்டு செய்திகள் / பாடசாலைகளின் அதிபர் பதவிகளுக்கான விண்ணப்பம் கோரல்!!

பாடசாலைகளின் அதிபர் பதவிகளுக்கான விண்ணப்பம் கோரல்!!

வெற்றிடங்கள் நிலவும் தேசிய பாடசாலைகளின் அதிபர் பதவிகளுக்கான விண்ணப்பங்களைக் கோர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை கல்வி நிர்வாகச் சேவை மற்றும் இலங்கை அதிபர் சேவை ஆகியவற்றில் சித்தி எய்தியுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளன.

பொதுச் சேவை ஆணைக்குழு மற்றும் கல்விச் சேவைக் குழுவின் பரிந்துரைக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கான விண்ணப்பங்கள் இன்று (31) இணையத்தளத்தில் பதிவேற்றப்படும் என, கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

www.moe.gov.lk என்ற இணையத்தளத்திற்குள் பிரவேசிப்பதனூடாக, விண்ணப்பங்களையும் மேலதிகத் தகவல்களையும் பெற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய பாடசாலைகளில் 206 அதிபர் வெற்றிடங்கள் நிலவுவதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

ரயில் சேவை தொடர்பில் மீளாய்வு செய்ய குழு

ரயில் சேவை தொடர்பில் மீளாய்வு செய்வதற்கான குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக ரயில் போக்குவரத்து சேவை அமைச்சர் C.B. ரத்னாயக்க தெரிவித்துள்ளார். ரயில் ...

%d bloggers like this: