Home / உள்நாட்டு செய்திகள் / பல்கலைக்கழக மாணவி முள்ளியவளையில் தற்கொலை!

பல்கலைக்கழக மாணவி முள்ளியவளையில் தற்கொலை!

மொரட்டுவ பல்கலைக்கழக மாணவி ஒருவர் முள்ளியவளை பகுதியில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் Information Technologg and management பிரிவில் கல்விகற்று வரும் 24 அகவையுடைய இராசநாயகம் நிறோசிகா என்ற மாணவியே இவ்வாறு தற்கொலை செய்துள்ளாதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த மாணவி வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் விழாவில் கலந்து கொள்வதற்காக முள்ளியவளை மூன்றாம் வட்டாரத்தில் உள்ள அவரது சொந்த வீட்டிற்கு கடந்த 26 ஆம் திகதி சென்றதாக குறிப்பிட்டப்படுகின்றது.

இந்த நிலையில் குறித்த மாணவி இன்று காலை அவரது வீட்டு முற்றத்தில் நின்ற மாமரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டார் என பெற்றோர் கண்ணீருடன் தெரிவித்தனர்.மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் முள்ளியவளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

About இனியவன்

x

Check Also

RADIOTAMIZHA | கத்தாரில் இருந்து நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ள 268 இலங்கையர்கள்

கத்தாரில் இருந்து மேலும் 268 இலங்கையர்கள் இன்று (27) நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் விசேட விமானத்தின் ...

%d bloggers like this: