Home / உலகச் செய்திகள் / பயங்கரவாதிகள் 12 பேர் சுட்டுக்கொலை!!

பயங்கரவாதிகள் 12 பேர் சுட்டுக்கொலை!!

எகிப்தில் சுற்றுலா பேருந்து மீதான தாக்குதலுக்கு பின், 12 பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்றதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கீசா பிரமிடுகள் அமைந்துள்ள பகுதி வழியாக சென்ற சுற்றுலா பேருந்து ஒன்று, சாலையோரம் இருந்த குண்டு வெடித்து விபத்துக்குள்ளானது.இதில், பேருந்தில் இருந்த தென் ஆப்ரிக்க பயணிகள் உட்பட 17 பேர் காயமடைந்தனர்.

இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு யாரும் பொறுப்பேற்காத நிலையில், தலைநகர் கெய்ரோ முழுவதும் தீவிர தேடுதல் வேட்டை நடத்திய பாதுகாப்பு படை, துப்பாக்கி சூடு நடத்தி 12 பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்றது. இதனை உறுதிசெய்த அந்நாட்டு அமைச்சகம், பயங்கர ஆயுதங்களை கைப்பற்றியுள்ளதாக தெரிவித்துள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

கயிற்றில் அந்தரத்தில் தொங்கியபடி யோகா செய்து உலக சாதனை

ஜெர்மனியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அதிக உயரத்தில் கயிற்றில் அந்தரத்தில் தொங்கியபடி யோகா செய்து உலக சாதனை படைத்துள்ளார். ஃபிரடெரிக் ...

%d bloggers like this: