Home / உள்நாட்டு செய்திகள் / பயங்கரவாதத்திற்கு எதிராக கொழும்பில் இடம்பெற்ற கவயீர்ப்புப் போராட்டம்!!

பயங்கரவாதத்திற்கு எதிராக கொழும்பில் இடம்பெற்ற கவயீர்ப்புப் போராட்டம்!!

அனைத்து இன மக்களும் இலங்கையராய் ஒன்றிணைவோம் என்பதை வலியுறுத்தி கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த போராட்டம் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இன்று 04 (சனிக்கிழமை) நடைபெற்றது.

இந்த போராட்டத்தில் ‘ஒரே நாடு ஒரே குடும்பம்’ என்பதை வலியுறுத்தி கைகளில் வெள்ளை ரோஜாப் பூக்களை ஏந்தியவாறு மூவின மக்களும் ஒன்றிணைந்து பங்கெடுத்திருந்தனர். இதில் அதிகளவில் முஸ்லிம் மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது, ‘பயங்கரவாதத்துக்கு மதம் கிடையாது’, ‘ஒரே நாடு ஒரே மக்கள்’, ‘எழுவோம் எதிர்ப்போம் ஒன்றிணைவோம்’, ‘நாங்கள் இலங்கையர்கள்’, ‘ஒரே இலங்கையராய் ஒன்றிணைவோம்’ போன்ற பல பதாதைகளை ஏந்தியவாறு கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA |ஊரடங்குச் சட்டத்தை மீறிய 173 பேர் கல்முனையில் கைது

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த காலப்பகுதியில் சட்டத்தை மீறிய பல்வேறுபட்ட குற்றச்சாட்டில் கல்முனை பொலிஸாரால் இதுவரை 173 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ...

%d bloggers like this: