Home / உலகச் செய்திகள் / பனிப்புயலின் தாக்கத்தினால் அமெரிக்காவில் 5 பேர் பலி

பனிப்புயலின் தாக்கத்தினால் அமெரிக்காவில் 5 பேர் பலி

பனிப்புயலின் தாக்கத்தினால் அமெரிக்காவின் மத்திய மேற்கு மாகாணங்களில் 5 பேர் உயிரிழந்தனர்.

மேலும் மெக்சிகோவில் மழையுடன் தொடங்கிய வானிலை கொலராடோவில் இருந்து பனிப்புயலாக மாறி மத்திய மேற்கு மாகாணங்களில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது மத்திய அட்லான்டிக் வரை 2 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. மிசோரி மற்றும் கான்சாஸில் சாலையில் தேங்கிய பனியால் ஏற்பட்ட விபத்து உள்ளிட்டவை காரணமாக 5 பேர் உயிரிழந்தனர்.

செய்ன்ட் லூயிசில் ஒன்றரை அடி வரை சாலையில் பனி தேங்கியுள்ளது. அங்கு ஏராளமான விமானங்களின் சேவை ரத்து  செய்யப்பட்டுள்ளதுடன். இல்லினாய்ஸ், இண்டியானா, ஓஹியோ உள்ளிட்ட இடங்களிலும் மக்கள் வீடுகளுக்குள் முடங்கிக்கிடக்கின்றனர்.

வாஷிங்டனில் 8 அங்குலம் வரையும், மத்திய மற்றும் வடக்கு விர்ஜினியாவில் 10 அங்குலம் வரையிலும் பனி தேங்கும் எனக் கூறப்படுகிறது. மேலும் பனிப்புயலால் பல அடுக்குகள் கொண்ட ஆடைகளையே மக்கள் அணிந்து வருகின்றனர்.

 

About அகமுகிலன்

x

Check Also

நிலநிடுக்கத்தால் பலத்த சேதமடைந்த கேமரினோ நகருக்கு சென்ற போப் ஆண்டவர்

இத்தாலியில் நிலநிடுக்கத்தால் பலத்த சேதமடைந்த கேமரினோ நகருக்கு சென்ற போப் ஆண்டவர், ஆலய திருப்பலியில் கலந்து கொண்டார். இத்தாலியின் மத்திய ...

%d bloggers like this: