Home / விளையாட்டுச் செய்திகள் / பட்லர், ரூட் சதம் வீண்… போராடி தோற்ற இங்கிலாந்து: பாகிஸ்தான் த்ரில் வெற்றி!

பட்லர், ரூட் சதம் வீண்… போராடி தோற்ற இங்கிலாந்து: பாகிஸ்தான் த்ரில் வெற்றி!

இங்கிலாந்து அணிக்கு எதிரான உலகக்கிண்ணம் கிரிக்கெட் தொடரின் ஆறாவது போட்டியில் 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி த்ரில் வெற்றி பெற்றது.

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உலகக்கிண்ணம் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. வரும் ஜூலை 14, வரை இத்தொடர் நடக்கிறது.

மொத்தமாக 45 லீக் போட்டிகள் மற்றும் 3 நாக் – அவுட் போட்டிகள் என 48 போட்டிகள் சுமார் 12 நகரங்களில் நடக்கிறது.

உலகக்கிண்ணம் தொடரின் ஆறாவது போட்டியில், இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி, முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.

இதையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு பாபர் அசாம் (63), முகமது ஹபீஸ் (84), சர்ப்ராஜ் (55) ஆகியோர் அரைசதம் அடித்து கைகொடுக்க, பாகிஸ்தான் அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 348 ஓட்டங்கள் குவித்தது.

இதையடுத்து வரலாற்று இலக்கை துரத்திய இங்கிலாந்து அணிக்கு ஜேசன் ராய் (8), பேர்ஸ்டோவ் (32) சுமாரான துவக்கம் அளித்தனர். தொடர்ந்து வந்த அணித்தலைவர் மார்கன் (9) ஏமாற்றினார். பென் ஸ்டோக்ஸ் (13) வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார்.

பின்னர் இணைந்த பட்லர், ரூட் ஜோடி, அணியை சரிவில் இருந்து மீட்டது. பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களின் பந்துகளை இருவரும் நாலாபக்கமும் சிதறடித்தனர். சீரான இடைவேளையில் இருவரும் பவுண்டரிகள் விளாசினர்.

முதலில் ரூட், ஒருநாள் அரங்கில் தனது 15வது சதத்தை பூர்த்தி செய்தார். தவிர, இந்தாண்டு உலகக்கிண்ணம் கிரிக்கெட் தொடரில் சதம் விளாசிய முதல் வீரர் என்ற பெருமை பெற்றார்.

இவர் 107 ஓட்டங்கள் எடுத்த போது சதாப் சுழலில் சிக்கினார். இவர் வெளியேறிய கொஞ்ச நேரத்திலேயே உலகக்கிண்ணம் அரங்கில் அதிவேக சதம் விளாசிய பட்லர் (103 ஓட்டங்கள், 75 பந்துகள்) வெளியேற, இங்கிலாந்து அணியின் ரன் வேகம் குறைந்தது.

கடைசி நேரத்தில் மொயின் அலி (19), கிறிஸ் வோக்ஸ் (21) ஓரளவு அதிரடி கட்டி வெளியேறினர். இதனையடுத்து இங்கிலாந்து அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 334 ஓட்டங்கள் எடுத்து 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

பாகிஸ்தான் அணியில் வஹாப் ரியாஸ் 3 விக்கெட்டுகளும், ஷதப் கான் மற்றும் முகமது அமிர் தலா 2 விக்கெட்டுகளும், முகமது ஹபீஸ் மற்றும் சோயிப் மாலிக் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

About இனியவன்

x

Check Also

கிரிக்கெட் வீரர்களின் முறைகேடுகளைத் தவிர்க்க புதிய நடவடிக்கை

கிரிக்கெட் வீரர்கள் ஊக்க மருந்துகளை உட்கொள்வது, பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவது போன்ற குற்ற செயல்கள் குறித்த விழிப்புணர்வை இந்திய கிரிக்கெட் ...

%d bloggers like this: