Home / ஆரோக்கியம் / பச்சைப்பயறு கஞ்சி செய்வது எப்படி?

பச்சைப்பயறு கஞ்சி செய்வது எப்படி?

பச்சைப்பயறில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.

இந்தவகையில் பச்சைப்பயறில் சத்தான சுவையான கஞ்சி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
  • முழு பச்சைப் பயறு – ஒரு கப்
  • பச்சை மிளகாய் – 2
  • பூண்டுப் பல் – 5
  • பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை
  • வெந்தயம் – ஒரு டீஸ்பூன்
  • இஞ்சி விழுது – ஒரு டீஸ்பூன்
  • உப்பு – தேவைக்கேற்ப.
செய்முறை

முதலில் வெந்தயத்தை 15 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

பின்னர் மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். பச்சைப்பயறை அலசி, 6 மணிநேரம் ஊறவைத்துக் கொள்ளவும்.

ஊறிய பச்சைப்பயறுடன் நறுக்கிய பச்சை மிளகாய், நறுக்கிய பூண்டுப் பல், ஊறவைத்த வெந்தயம், இஞ்சி விழுது கலந்து, உப்பு சேர்த்து குக்கரில் வேகவிடவும்.

விசில் போனவுடன் இறக்கி வைத்து, சூடாக பெருங்காயத்தூள் சேர்த்துப் பரிமாறவும்.

About இனியவன்

x

Check Also

பல் சொத்தை சரியாக்குவதற்கும் வராமல் தடுப்பதற்கும் அற்புதமான இயற்கை முறை

பற்சொத்தை ஒரு சாதாரணமான விஷயம் கிடையாது. இதனால் ஏற்படும் வலி உங்கள் நாள்களை மிகவும் கஷ்டமாக்கி விடும். நீங்கள் பல் ...

%d bloggers like this: