Home / உலகச் செய்திகள் / நோபல் பரிசு பெற்ற முதல் அமெரிக்க கறுப்பின எழுத்தாளர் டோனி மாரீசன் காலமானார்!!

நோபல் பரிசு பெற்ற முதல் அமெரிக்க கறுப்பின எழுத்தாளர் டோனி மாரீசன் காலமானார்!!

நோபல் பரிசு பெற்ற முதல் அமெரிக்க கறுப்பின எழுத்தாளர் டோனி மாரீசன் நியுயார்க்கில் உடல் நலக்குறைவால் காலமானார்.

அவருக்கு வயது 88. Beloved Song of Solomon உள்ளிட்ட புத்தகங்களுக்காக உலகப்புகழ் பெற்றவர் டோனி மாரீசன். சுதந்திர வேட்கையும் இன விடுதலையும் மிக்க அவர் எழுத்துகள் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. 40 வயதில் தமது முதல் புத்தகத்தை எழுதிய அவர், அடுத்தடுத்து எழுதிய ஆறு நாவல்களால் பெரும் புகழ்பெற்றார்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

அவரது மறைவு குறித்து இரங்கல் செய்தி வெளியிட்டுள்ள பதிப்பாளர், மற்றும் அவர் குடும்பத்தினர், கறுப்பின மக்களுக்கான தனிமொழியை தமது இலக்கியப் படைப்புகளில் உருவாக்க முயற்சித்தவர் என்றும் அமெரிக்காவின் பன்முக கலாச்சாரத்தை உலகிற்கு உரக்க தெரிவித்தவர் என்றும் புகழாரம் சூட்டியுள்ளனர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

2ஆம் உலகப் போரில் உயிரிழந்தவர்களுக்கு நினைவஞ்சலி

2ஆம் உலகப்போரின்போது உயிரிழந்தவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தும் வகையில், லண்டனில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பிரிட்டிஷ் அரச குடும்பத்தினர் பங்கேற்றனர். லண்டன் ராயல் ...

%d bloggers like this: