Home / உலகச் செய்திகள் / நைஜீரியாவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 60க்கும் மேற்பட்டோர் பலி!!

நைஜீரியாவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 60க்கும் மேற்பட்டோர் பலி!!

நைஜீரியாவில் கிராம மக்கள் மீது போக்கோஹராம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

நைஜீரியாவின் மைட்குரி (Maiduguri) என்ற இடத்திற்கு அருகிலுள்ள புது (Budu) எனும் கிராமத்தில், உறவினர் ஒருவரது இறுதிச் சடங்கில் பங்கேற்ற பின்னர் வீடு திரும்பிக் கொண்டிருந்த கிராம மக்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இருசக்கரவாகனங்களில் பயங்கர சத்தங்களை எழுப்பியவாறு வந்த தீவிரவாதிகள், கிராம மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கூறப்படுகிறது.

இந்த தாக்குதலில் இதுவரை 60க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். கடந்த 2014ம் ஆண்டு போர்னோ மாகாணத்திலுள்ள பெண்கள் பள்ளியிலிருந்து 276 சிறுமிகளை போக்கோஹராம் தீவிரவாதிகள் கடத்திச் சென்றது குறிப்பிடத்தக்கது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | ஆப்பிள் நிறுவனத்திடம் ரூ 10,800 கோடி இழப்பீடு கேட்டு சீன நிறுவனம் வழக்கு

செயற்கை நுண்ணறிவு தொடர்பான தங்களது காப்புரிமையை மீறி விட்டதாக, ஆப்பிள் நிறுவனத்தின் மீது சீன நிறுவனமான ஷியோவோ-ஐ ((Xiao-i)) இழப்பீடு ...