Home / உள்நாட்டு செய்திகள் / நேற்று நள்ளிரவு முதல் பால்மாவின் விலையை அதிகரிக்க அனுமதி!!

நேற்று நள்ளிரவு முதல் பால்மாவின் விலையை அதிகரிக்க அனுமதி!!

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையை நேற்று நள்ளிரவு முதல் அதிகரிக்க நுகர்வோர் அதிகார சபை அனுமதியளித்துள்ளது.

இதற்கமைய, ஒரு கிலோகிராம் பால்மாவின் விலை 60 ரூபாவினால் அதிகரிக்கப்படுகிறது.

அத்துடன், 400 கிராம் பால்மாவின் விலை 25 ரூபாவினால் அதிகரிக்கப்படுகிறது.

இதற்கமைய, 860 ரூபாவாக விற்பனை செய்யப்படும் ஒரு கிலோகிராம் பால்மாவின் விலை புதிய விலை 920 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது.

அத்துடன், 345 ரூபாவாக விற்பனை செய்யப்படும் 400 கிராம் பால்மாவின் புதிய விலை 370 ரூபாவாக உயர்த்தப்படவுள்ளது.

பால்மாவிற்கான விலை சூத்திரத்தை நடைமுறைப்படுத்துவதற்கு கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டதை அடுத்து, இவ்வாறு விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

 

 

About அகமுகிலன்

x

Check Also

100 கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது!!

புத்தளம் – கற்பிட்டி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது 100 கிராம் கேரள கஞ்சாவுடன் நபரொருவர், கடற்படையால் கைது ...

%d bloggers like this: