Home / உள்நாட்டு செய்திகள் / நேற்று  நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பு!

நேற்று  நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பு!

நேற்று  நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய ஒக்டைன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 5 ரூபாவாலும், ஒக்டைன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 6 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 8 ரூபாவாலும், ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 4 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

147 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒக்டைன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒனிறின் புதிய 152 ரூபாவாகும்.

123 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒக்டைன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்று 129 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

118 ரூபாவாகவிருந்த சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 126 ரூபாவாகும்.

99 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்று 103 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

LIKE-Facebook

 

About அகமுகிலன்

x

Check Also

வவுனியாவில் பார்தீனியச் செடிகள் அழிப்பு!

வவுனியா சாம்பல் தோட்டம் கிராமத்தில் உள்ள அம்மன் ஆலய வளாகத்தில் காணப்பட்ட பெருந்தொகையான பார்தீனியச் செடிகள் பம்பைமடு விவசாய போதனாசிரியர் ...

%d bloggers like this: