Home / உள்நாட்டு செய்திகள் / நெல்சன் மண்டேலாவின் உருவச்சிலையை யாழ்ப்பாணத்தில் ஸ்தாபிக்க தீர்மானம்…!!

நெல்சன் மண்டேலாவின் உருவச்சிலையை யாழ்ப்பாணத்தில் ஸ்தாபிக்க தீர்மானம்…!!

தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி சமாதானத்தின் தந்தை என போற்றப்படும் நெல்சன் மண்டேலாவின் உருவச்சிலையை யாழ்ப்பாணத்தில் ஸ்தாபிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தென்னாபிரிக்காவின் உயர்ஸ்தானிகர் ரொபினா பீ. மார்க்ஸ் இன்று வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயை சந்தித்தார்.

இந்த சந்திப்பு ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது இருநாடுகளுக்கும் இடையே இடம்பெறும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மற்றும் மத சகவாழ்வு என்பன குறித்து நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டுள்ளது.

நெல்சன் மண்டேலா சமாதானத்தின் சின்னமாக இருப்பதாகவும், இது உலகம் முழுவதிலும் உள்ள அபிப்பிராயமாகும்.

அதன்படி, நெல்சன் மண்டேலாவின் உருவச்சிலையை யாழ்ப்பாணத்தில் ஸ்தாபிக்க வேண்டும் என்றும் யோசனையை உயர்ஸ்தானிகர் முன்வைத்தமையை இட்டு தாம் நன்றி தெரிவிப்பதாக வட மாகாண ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

About இனியவன்

x

Check Also

சத்தியமூர்த்தியின் நினைவு நாளை முன்னிட்டு ”நினைவுகளுடன் பேசுதல்” நூல் வெளியீட்டு விழா!!

யாழ். இந்துக் கல்லூரியின் மைந்தனும் ஊடகவியலாளருமான பு.சத்தியமூர்த்தியின் 10 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு “நினைவுகளுடன் பேசுதல்” நூல் ...

%d bloggers like this: