Home / உள்நாட்டு செய்திகள் / நுவரெலியா மாவட்ட மருத்துவமனை ஜனாதிபதியால் திறப்பு!!

நுவரெலியா மாவட்ட மருத்துவமனை ஜனாதிபதியால் திறப்பு!!

நெதர்லாந்து அரசின் இலகு கடனுதவி திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட நுவரெலியா மாவட்ட மருத்துவமனையை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று (15) முற்பகல் மக்களின் பாவனைக்காக கையளித்தார்.

600 கட்டில்களைக் கொண்ட நோயாளர் விடுதி, நவீன தொழிநுட்பத்துடனான சத்திர சிகிச்சைக்கூடம், தீவிர சிகிச்சைப் பிரிவு, வெளிநோயாளர் சிகிச்சைப் பிரிவு, மருத்துவக்கூடம், குருதிமாற்று சிகிச்சை நிலையம் மற்றும் மருத்துவர்களுக்கும் தாதியர்களுக்குமான உத்தியோகபூர்வ இல்லங்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ள இந்த மருத்துவமனை 07 பில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

2012ஆம் ஆண்டில் ஜனாதிபதி அவர்கள் சுகாதார அமைச்சராக பதவி வகித்தபோது இந்த மருத்துவமனையின் நிர்மாணப் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன், நுவரெலியாவிற்கு வருகைத் தரும் சுற்றுலா பிரயாணிகளுக்கு உயர் தரத்திலான, பாதுகாப்பான, வினைத்திறனான மருத்துவ சேவைகளை வழங்கவும் இதனூடாக எதிர்பார்க்கப்படுகிறது.

நினைவுப்பலகையை திரைநீக்கம் செய்து புதிய மருத்துவமனையை மக்களின் பாவனைக்காக கையளித்த ஜனாதிபதி அதனை பார்வையிட்டதுடன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதலாவது நோயாளிகள் மூவரையும் பதிவு செய்தார்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

அமைச்சர்களான ராஜித்த சேனாரத்ன, நவீன் திசாநாயக்க உள்ளிட்ட மாகாண மக்கள் பிரதிநிதிகளும் ஆளுநர் மைத்ரி குணரத்ன, சுகாதார அமைச்சின் செயலாளர் வசந்தா பெரேரா, சுகாதார பணிப்பாளர் நாயகம் விசேட மருத்துவ நிபுணர் அனில் ஜாசிங்க, நெதர்லாந்து அரசாங்கத்தின் விசேட பிரதிநிதிகள் மற்றும் நுவரெலியா பொது மருத்துவமனையின் பணிப்பாளர் மகேந்திர செனவிரத்ன உள்ளிட்ட பணிக்குழாமினர் என பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

ரயில் சேவை தொடர்பில் மீளாய்வு செய்ய குழு

ரயில் சேவை தொடர்பில் மீளாய்வு செய்வதற்கான குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக ரயில் போக்குவரத்து சேவை அமைச்சர் C.B. ரத்னாயக்க தெரிவித்துள்ளார். ரயில் ...

%d bloggers like this: