Home / உள்நாட்டு செய்திகள் / நீதிபதி இளஞ்செழியனின் உயிருக்கு ஆபத்தா..??

நீதிபதி இளஞ்செழியனின் உயிருக்கு ஆபத்தா..??

திருகோணமலை மேல் நீதிமன்ற வளாகத்தில் நீதிபதி இளஞ்செழியனின் உயிருக்கு ஆபத்து என கத்திய இளைஞனால் பரபரப்பு ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.

திருகோணமலை மேல் நீதிமன்றத்தின் நீதிமன்ற நடவடிக்கைகள் நேற்று நடைபெற்றுக் கொண்டிருந்த போது 25 வயது மதிக்கத்தக்க இளைஞன் இவ்வாறு கத்தியதாக கூறப்படுகிறது.வித்தியாவின் வழக்கு தொடர்பில் விசாரணை செய்த நீதிபதி இளஞ்செழியனின் உயிருக்கு ஆபத்து காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என அவர் கூக்குரலிட்டுள்ளார்.இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார், குறித்த இளைஞனிடம் விசாரணையினை மேற்கொண்டுள்ளனர்.இதன்போது அந்த இளைஞன் புத்திசுவாதீனமற்றவர் என தெரியவந்துள்ளது.எனினும், சம்பவம் தொடர்பான விசாரணைகளை நீதிமன்ற பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

 

About இனியவன்

x

Check Also

வெளியானது உச்ச நீதிமன்ற தீர்ப்பு

ஜனாதிபதியினால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதாக வெளியான வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்குட்படுத்தி தாக்கல்செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையின் தீர்ப்பு சற்றுமுன்னர் உயர்நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. ...

%d bloggers like this: