Home / உலகச் செய்திகள் / நியூசிலாந்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய பயங்கரவாதி சிறையில் அடைப்பு-காணொளி உள்ளே

நியூசிலாந்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய பயங்கரவாதி சிறையில் அடைப்பு-காணொளி உள்ளே

நியூசிலாந்து மசூதியில் துப்பாக்கிச்சூடு நடத்திய ஆஸ்திரேலியக்காரர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனிடையே துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்ட இந்தியர்கள் குறித்த தகவலை தெரிவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்தின் கிழக்கு கடலோர நகரமான கிறிஸ்ட்சர்ச்சிலுள்ள இருவேறு மசூதிகளில் துப்பாக்கி ஏந்திய நபர் நடத்திய தாக்குதலில் 49 பேர் உயிரிழந்தனர். இந்த  சம்பவம் தொடர்பாக கொலை குற்றம் சாட்டப்பட்டுள்ள பிராண்டன் ஹாரிசன் டாரண்ட் என்னும் 28 வயதான ஆஸ்திரேலியர்  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வெள்ளை நிற சட்டை அணிந்து இருந்த அவர், கைவிலங்குடன், கிறிஸ்ட் சர்ச் நகர நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

பிரென்டனை காவலில் வைப்பதற்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஏப்ரல் 5-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். இவர் மீது மற்ற குற்றச்சாட்டுகள் விரைவில் பதிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரெண்டன் டாரண்ட் ஜாமீன் எதுவும் கோரவில்லை.

இதுகுறித்து பேசிய நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன், துப்பாக்கி உரிமத்தை முன்னரே பெற்றிருந்த பிரெண்டன் கைதுசெய்யப்பட்டபோது ஐந்து துப்பாக்கிகளை வைத்திருந்ததாகவும், நியூசிலாந்தின் துப்பாக்கி பயன்பாட்டு விதிமுறைகளில் மாற்றம் செய்ய இருப்பதாகவும்  தெரிவித்தார். துப்பாக்கிச் சூடு சம்பவத்தை அடுத்து நியூசிலாந்து மக்கள் ஒன்று பட்டு இருப்பதாகவும் அவர் கூறினார்.

இதனிடையே இன்னும் இரண்டு பேர் காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும், அவர்கள் இதற்கு முன்னர் குற்றம் புரிந்ததற்காக பதிவு ஏதும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோருக்கு கிறிஸ்ட் சர்ச் நகர மக்கள் மலர் கொத்துக்களை வைத்து அஞ்சலி செலுத்தினார்.

துப்பாக்கி சூட்டில் இருந்து தப்பிய வங்க தேச கிரிக்கெட் அணி வீர ர்கள், டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டதை அடுத்து கிறிஸ்ட் சர்ச் நகரில் இருந்து பத்திரமாக வெலிங்கடன் நகருக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இதனிடையே  துப்பாக்கிச் சூட்டில் ஐதராபாத்தைச் சேர்ந்த ஒருவரும் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்த முழுத் தகவலை தெரிவிக்க வேண்டுமென ஐதராபாத்தில் உள்ளவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தியர்கள் 9 பேரை காணவில்லை என்று வெளியான தகவல் குறித்த கூடுதல் விபரங்களை வெளியிட வேண்டும் என்றும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதனிடையே, நியூசிலாந்து நாட்டின் கிறிஸ்ட்சர்ச் நகரில் நிகழ்த்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில், கேரளாவைச் சேர்ந்த இளம்பெண் உயிரிழந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. கேரள மாநிலத்தின் பிரபல நாளிதழான மலையாள மனோரமா நாளிதழின் இணையப்பக்கத்தில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. திருச்சூர் மாவட்டம் கொடுங்களூரைச் சேர்ந்த ஆன்சி அலிபாவா((Ancy Alibava)) M.Tech படித்த முடித்து நிலையில், நியூசிலாந்தில் பணியாற்றிவரும் நாசருக்கு மணமுடித்து கொடுக்கப்பட்டார். கடந்தாண்டு நியூசிலாந்து நாட்டிற்கு சென்று கணவரோடு தங்கியிருந்த நிலையில், வெள்ளிக்கிழமை நிகழ்த்தப்பட்ட கொடூரச் சம்பவத்தில், கணவரின் கண்முன்னே ஆன்சி உயிரிழந்தார். பலியான இளம்பெண்ணின் கணவர் நாசர் நூலிழையில் உயிர் தப்பியுள்ளார்.

கிறிஸ்ட்சர்ச் தீவிரவாத தாக்குதலில், ஹைதராபாத்தைச் சேர்ந்த அகமது இக்பால் ஜஹாங்கீர், மெகபூப் கோக்கார் ஆகியோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில், அகமது இக்பால், கிரிஸ்ட்சர்ச் நகரில் ஹோட்டல் வைத்திருப்பதாக கூறப்படுகிறது. மெகபூப் கோக்கார், நியூசிலாந்தில் உள்ள மகனை பார்க்கச் சென்ற நிலையில், தொழுகைக்காக சென்றவர் மீது துப்பாக்கிச்சூடு நடைபெற்றுள்ளது.

இதற்கிடையே, காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட 9 இந்தியர்களும் உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்களில், 4 பேர் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், மூன்று பேர் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது. கேரளாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் உட்பட 9 பேரும் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

About அகமுகிலன்

x

Check Also

உலக அளவில், அதிக முறை எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து காமி ரிடா செர்பா சாதனை!!

உலக அளவில், அதிக முறை எவரெஸ்ட் சிகரத்தை தொட்டவர் எனும் பெருமையை கிழக்கு நேபாளத்தைச் சேர்ந்த ஒருவர் மீண்டும் பெற்றுள்ளார். ...

%d bloggers like this: