Home / சினிமா செய்திகள் / நாளை முதல் படபிடிப்பு ரத்து – ஆர்.கே.செல்வமணி அறிவிப்பு!

நாளை முதல் படபிடிப்பு ரத்து – ஆர்.கே.செல்வமணி அறிவிப்பு!

திரையரங்குகளில் டிஜிட்டல் முறையில் புதிய படங்கள் ஒளிபரப்பு செய்யப்படுவதற்கு, க்யூப், யுஎஃப்ஓ உள்ளிட்ட டிஜிட்டல் ஒளிபரப்பு நிறுவனங்கள் திரைத்துறையினரிடம் அதிக கட்டணம் வசூலிப்பதாக எழுந்த புகாரை அடுத்து, கியூப் நிறுவனத்துடன் நடைபெற்ற பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால் மார்ச் 1 முதல் புதிய படங்கள் எதனையும் வெளியிடாமல் தயாரிப்பாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனையடுத்து நடைபெற்ற பேச்சு வார்த்தையும் தோல்வியில் முடிந்ததால், நாளை முதல் சினிமா சம்மந்தப்பட்ட அனைத்து பணிகளும் நடைபெறாது என தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் அறிவித்திருந்தார். இந்நிலையில், நாளை முதல் படப்பிடிப்பு ரத்து என ஃபெப்சி சங்கதலைவர் ஆர்.கே.செல்வமணி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, திரைத்துறையில் நிகழ்ந்து வரும் பிரச்சனை காரணமாக வெளியூர் படபிடிப்பு 23- ஆம் தேதி முதலும், அனைத்து உள்ளூர் திரைப்பட படப்பிடிப்புகள் நாளை முதலும் நிறுத்திவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

About இனியவன்

x

Check Also

மீண்டும் சர்ச்சையில் சர்கார்!!!

விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ‘சர்கார்’ திரைப்படத்தில் மிக்ஸி, கிரைண்டர் உள்பட இலவச பொருட்களை எரிக்கும் காட்சிக்கு அதிமுகவினர் கடும் ...

%d bloggers like this: