Home / உள்நாட்டு செய்திகள் / நாளை சனிக்கிழமை பல்கலைக்கழக மாணவர்கள் மாபெரும் எழுச்சிப் பேரணி!

நாளை சனிக்கிழமை பல்கலைக்கழக மாணவர்கள் மாபெரும் எழுச்சிப் பேரணி!

போர்க்குற்றங்களுக்கு நீதி வழங்குவதற்கு சர்வதேச விசாரணையை நடத்த வலியுறுத்தியும் இலங்கை அரசுக்கு ஜெனிவாவில் கால அவகாசம் வழங்கக்கூடாது என்ற கோரிக்கையை முன்வைத்தும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் நாளை மாபெரும் பேரணியை நடத்தவுள்ளனர்.

யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் ஆரம்பித்து முற்றவெளி வரை இந்தப் பேரணி இடம்பெறவுள்ளது. இந்தப் பேரணிக்கு, தமிழ் மக்கள் பேரவை, தமிழர் விடுதலைக் கூட்டணி என்பன முழுமையான ஆதரவைத் வழங்குவதாக இன்று அறிவித்துள்ளன.

முன்னதாக இந்த எழுச்சிப் பேரணிக்கு பல்வேறு தமிழ் கட்சிகள், அமைப்புகள் ஆதரவு தெரிவித்தன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

 

 

 

 

About அகமுகிலன்

x

Check Also

100 கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது!!

புத்தளம் – கற்பிட்டி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது 100 கிராம் கேரள கஞ்சாவுடன் நபரொருவர், கடற்படையால் கைது ...

%d bloggers like this: