Home / உள்நாட்டு செய்திகள் / நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று பிற்பகல் வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, சபரகமுவ, மேல், மத்திய, ஊவா, தென், வடமத்திய, வடமேல் மாகாணங்களிலும் மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் 75 தொடக்கம் 100 மில்லிமீற்றர் வரை மழைவீழ்ச்சி பதிவாகக்கூடுமெனவும் குறித்த திணைக்கள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, காங்கேசன்துறை முதல் மன்னார், கொழும்பு மற்றும் காலி வழியாக ஹம்பாந்தோட்டை வரையிலான கடலோரப் பகுதிகளில் காற்றின் வேகமானது மணிக்கு 70 தொடக்கம் 80 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE   

About இனியவன்

x

Check Also

வெலிகந்த – அசேலபுர பகுதியில் மூன்று யானைகள் ரயிலுடன் மோதி விபத்து..!!

மட்டக்களப்பு மற்றும் கொழும்பிற்கு இடையிலான ரயில் மார்க்கத்தின் அசேலபுர பிரதேசத்தில் மூன்று யானைகள் ரயிலுடன் மோதியுள்ளன. ரயில் என்ஜினில் அகப்பட்டு ...

%d bloggers like this: