Home / உள்நாட்டு செய்திகள் / நாட்டின் பல பாகங்களில் இருந்தும் கச்சதீவுக்கு வருகை தந்த வண்ணம் உள்ள பக்தர்கள்!!

நாட்டின் பல பாகங்களில் இருந்தும் கச்சதீவுக்கு வருகை தந்த வண்ணம் உள்ள பக்தர்கள்!!

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

இன்று காலை 7.30 மணியளவில் குறிகட்டுவான் இறங்கு துறையில் இருந்து முதலாவது படகுச் சேவை ஆரம்பமானது.

ஆலய வருடாந்த திருவிழாவுக்கான பயண ஏற்பாடுகளை கடற்படையினர் மேற்கொண்டனர்.

இன்று அதிகாலை 3.30 மணிமுதல் யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையத்திலிருந்து குறிகட்டுவானை நோக்கிப் பேருந்துகள் புறப்பட்டதுடன் அந்தச் சேவைகள் காலை 10.30 மணிவரை தொடர்ந்து நடைபெறும்.

நாளை காலை முதல் குறிகட்டுவானிலிருந்து யாழ்ப்பாணத்துக்கான விசேட பேருந்துச் சேவைகள் நடாத்தப்படும்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

 

 

About அகமுகிலன்

x

Check Also

வெல்லம்பிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு இடமாற்றம்

வெல்லம்பிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உடன் அமுலுக்குவரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியின் பேரில் இந்த இடமாற்றம் ...

%d bloggers like this: