Home / உள்நாட்டு செய்திகள் / நாட்டின் சில பகுதிகளில் மண்சரிவு ஏற்படும் அபாயம்

நாட்டின் சில பகுதிகளில் மண்சரிவு ஏற்படும் அபாயம்

தென் மேல் பருவப்பெயர்ச்சி காரணமாக நாட்டின் சில பகுதிகளில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதாக, தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கேகாலை, இரத்தினபுரி, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் அதிகூடிய மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இந்தப் பகுதிகளில் மண்சரிவு அபாயம் ஏற்படக்கூடும் என தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் பணிப்பாளர், கலாநிதி காமினி ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், மண்சரிவு அபாயமுள்ள பகுதிகளில் ஏற்கனவே தன்னியக்க மழைமானிகள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மண்சரிவு அனர்த்தத்திற்கான அறிகுறிகள் தென்படுமாயின் அது தொடர்பில் அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் பணிப்பாளர், கலாநிதி காமினி ஜயதிஸ்ஸ, பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | வடக்கிலிருந்து எமக்கு வாக்கு கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் அபிவிருத்திப் பணிகளை தொடர்ந்து மேற்கொள்வோம்- மஹிந்த

வடக்கு மாகாண மக்கள் தாமரை மொட்டுக்கு வாக்களிக்காவிட்டாலும் கூட, அரசாங்கம் அந்த மாகாணத்திற்கான அபிவிருத்திப் பணிகளை தொடர்ந்து மேற்கொள்ளும் என்று ...

%d bloggers like this: