Home / உள்நாட்டு செய்திகள் / நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி மன்றில் ஆஜர்

நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி மன்றில் ஆஜர்

ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி பொலிஸ் அதிகாரியொருவரை தாக்கியமை தொடர்பில் குற்றஞ்சுமத்தப்பட்டுள்ள  பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவு அதிகாரிகள் சிலருடன், பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி, அவருடைய பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் சாரதிக்கு இடையில் மோதலொன்று ஏற்பட்டிருந்தது.

இதன்போது, காயமடைந்த போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவின் பொலிஸ் கான்ஸ்டபிள், பண்டாரவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

தம்மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவித்து சமிந்த விஜேசிறியின் சாரதி தியத்தலாவ வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில், நேற்று முன்தினத்தில் அவர் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

About அகமுகிலன்

x

Check Also

அனுமதி பத்திரங்கள் இல்லாமல் மணல் ஏற்றிய இருவர் கைது!!

திருகோணமலை, கந்தல்காடு பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்  போது அனுமதி பத்திரங்கள் இல்லாமல் மணல் ஏற்றிய 02 பேரை கடற்படையினர் கைது ...

%d bloggers like this: