Home / உள்நாட்டு செய்திகள் / நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறியை கைது செய்ய சபாநாயகர் அனுமதி!

நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறியை கைது செய்ய சபாநாயகர் அனுமதி!

காவல்துறை அதிகாரியை தாக்கிய சம்பவம் தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறியை கைது செய்வதற்கு சபாநாயகரின் அனுமதி கிடைத்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

குறித்த இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினரின் சாரதி நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

பின்னர் நீதிமன்றத்தில் அவரை முன்னிலைப்படுத்திய போது எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

பண்டாரவளை நகரின் சுற்றுவட்ட பகுதியில், நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி, பயணித்த மகிழூந்து நிறுத்தி வைக்கப்பட்ட போது, மீண்டும் முன்னோக்கி சென்ற போது ஏற்பட்ட முறுகல் நிலையை அடுத்து குறித்த இந்த தாக்குதல் சம்பவம்  நடைபெற்றுள்ளது.

இந்த தாக்குதலுக்கு பண்டாரவளை காவல்நிலைய போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு அதிகாரியே தாக்குதலுக்கு உள்ளானார்.

மேலும் தாக்குதலுக்கு இலக்கான காவற்துறை அதிகாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றார்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

LIKE-Facebook

 

About அகமுகிலன்

x

Check Also

அனுமதி பத்திரங்கள் இல்லாமல் மணல் ஏற்றிய இருவர் கைது!!

திருகோணமலை, கந்தல்காடு பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்  போது அனுமதி பத்திரங்கள் இல்லாமல் மணல் ஏற்றிய 02 பேரை கடற்படையினர் கைது ...

%d bloggers like this: