Home / ஆரோக்கியம் / நவராத்திரி ஸ்பெஷல் சுண்டல் வகைகள் (ஒரே பார்வையில்…)

நவராத்திரி ஸ்பெஷல் சுண்டல் வகைகள் (ஒரே பார்வையில்…)

1. கொண்டைக்கடலை ஃப்ருட் சுண்டல்

என்னென்ன தேவை? 

முளைகட்டிய வெள்ளை கொண்டக்கடலை-ஓரு கப்,
ஆப்பிள்(சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்)-ஒன்று,
மாதுளை முத்துக்கள்-2 டேபிள்ஸ்பூன்,
திராட்சைப்பழம்-20,
வாழைப்பழம்(சிறிய துண்டுகளாக நறுக்கிக்  கொள்ளவும்)-ஒன்று,
சாட் மசாலா-ஒரு டீஸ்பூன்,
எலுமிச்சைச் சாறு- ஒரு டேபிள்ஸ்பூன்,
தேன்-ஒரு டீஸ்பூன்,
உப்பு-தேவையான அளவு.

எப்படி செய்வது?

முளைகட்டிய கொண்டக்கடலையை சிறிதளவு உப்பு சேர்த்து, தண்ணீர் தெளித்து ஆவியில் வேக விடவும். ஒரு  பாத்திரத்தில் வெந்த கடலை, நறுக்கிய ஆப்பிள் துண்டுகள், வாழைப்பழத் துண்டுகள், மாதுளை முத்துக்கள், திராட்சை, சாட் மசாலா, எலுமிச்சைச் சாறு, தேன் சேர்த்து நன்கு கலக்கினால் டேஸ்டி கொண்டக்கடலை-ப்ருட் சுண்டல் ரெடி இது, டயட்டில் இருப்பவர்களுக்கு ஏற்ற உணவு.

2. சிவப்பு சோயா சுண்டல்

என்னென்ன தேவை? 

உரித்த சிவப்பு சோயா பீன்ஸ்-ஒரு கப்,
இஞ்சி துருவல்-ஒரு டீஸ்பூன்,
கீறிய பச்சை மிளகாய்-2,
கரம் மசாலாத்தூள்-ஒரு  டீஸ்பூன்,
பட்டை-சிறிய துண்டு,
சோம்பு-கால் டீஸ்பூன்,
தேங்காய் துருவல்-2 டேபிள்ஸ்பூன்,
எண்ணெய், உப்பு-தேவையான அளவு.

எப்படி செய்வது?

உரித்த சிவப்பு சோயா பீன்ஸை வேக வைக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, பட்டை, சோம்பு, பச்சை மிளகாய் தாளித்து….. இஞ்சித் துருவல், வெந்த சோயா பீன்ஸ் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். தேங்காய் துருவல் தூவி இறக்கவும்.

3. ஸ்வீட் கார்ன் சுண்டல்

என்னென்ன தேவை?

ஸ்வீட் கார்ன்-1 கப்,
பச்சை மிளகாய்-2,
புதினா, கொத்தமல்லி-சிறிதளவு,
சோம்பு-கால் டீஸ்பூன்,உப்பு, தேங்காய் துருவல்-3, டேபிள்ஸ்பூன்,
எண்ணெய், உப்பு-தேவையான அளவு.

எப்படி செய்வது?

ஸ்வீட் கார்னை வேக வைக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, தாளித்து வெந்த கார்ன், உப்பு சேர்த்துக் கிளறவும். பிறகு, நறுக்கிய கொத்தமல்லி, புதினா, தேங்காய் சேர்த்துக் கிளறி இறக்கினால் டேஸ்டி கார்ன் சுண்டல் தயார்.

4. பட்டர் பீன்ஸ் சுண்டல்

என்னென்ன தேவை? 

உரித்த பட்டர் பீன்ஸ்- ஒரு கப்,
சோம்பு-கால் டீஸ்பூன்,
கறிவேப்பில்லை-சிறிதளவு,
கரம் மசாலாத்தூள்-ஒரு டீஸ்பூன்,
தேங்காய் துருவல்-2 டேபிள்ஸ்பூன்,
இஞ்சித் துருவல்-ஒரு டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு- தேவையான அளவு.

எப்படி செய்வது?

உரித்த பட்டர் பீன்ஸை உப்பு சேர்த்து வேக வைக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, சோம்பு, கறிவேப்பில்லை, இஞ்சித் துருவல் தாளித்து வெந்த பட்டர் பீன்ஸ், கரம் மசாலாத்தூள் சேர்த்து நன்கு கிளறவும். தேங்காய் துருவல் தூவி இறக்கவும்.

5. பச்சைப்பயறு பனீர் சுண்டல்

என்னென்ன தேவை?

முளைகட்டிய பச்சைப்பயறு-ஒரு கப்,
பனீர் துருவல்-முக்கால் கப்,
இஞ்சித் துருவல்- ஒரு டீஸ்பூன்,
கரம் மசாலாத்தூள்-ஒரு டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய்-2, சீரகம்-கால் டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு- தேவையான அளவு.

எப்படி செய்வது? 

முளைகட்டிய பயறை ஆவியில் வேகவுடவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, சீரகம்,  காய்ந்த மிளகாய் தாளித்து, இஞ்சித் துருவல் சேர்க்கவும். வெந்த பாசிப்பயறு, உப்பு சேர்த்துக் கலக்கவும். கரம் மசாலாத்தூள், பனீர் துருவல் சேர்த்து நன்கு கிளறி பரிமாறவும்.

6. கறுப்பு கொண்டைக்கடலை மசாலா சுண்டல்

என்னென்ன தேவை?

கறுப்பு கொண்டைக்கடலை- ஒரு கப்,
சோம்பு-கால் டீஸ்பூன்,
பட்டை-சிறிய துண்டு,
கிராம்பு, ஏலக்காய்-தலா ஓன்று,
புதினா-சிறிதளவு,
காய்ந்த மிளகாய்-3,
தேங்காய் துருவல்-3 டேபிள்ஸ்பூன்,
எண்ணெய், உப்பு- தேவையான அளவு.

எப்படி செய்வது?

கடலையை 6-8 மணி நேரம் ஊறவிட்டு, குக்கரில் வேக வைக்கவும். வெந்த கடலையை தண்ணீரை வடியவிட்டு எடுத்து வைக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, காய்ந்த மிளகாய், சோம்பு, பட்டை,கிராம்பு, ஏலக்காய் தாளித்து, புதினா சேர்த்து வதக்கவும். இதனுடன் வெந்த கடலை, தேவையான உப்பு சேர்த்துக்கிளறி, தேங்காய் துருவலை தூவி இறக்கினால் மசாலா சுண்டல் தயார். விருப்பப்பட்டால் கரம் மசாலாத்தூளும் சேர்க்கலாம்.

7. வேர்க்கடலை சுண்டல்

என்னென்ன தேவை?

பச்சை வேர்க்கடலை-ஒரு கப்,
காய்ந்த மிளகாய்-3,
தனியா-2 டீஸ்பூன்,
கடலைப் பருப்பு, உளுத்தம்பருப்பு-தலா ஒரு டீஸ்பூன்,
தேங்காய் துருவல்-2,
டேபிள்ஸ்பூன், கறிவேப்பில்லை, கொத்தமல்லி-சிறிதளவு,
கடுகு, பெருங்காயத்தூள்-தலா கால் டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு- தேவையான அளவு.

எப்படி செய்வது?

பச்சை வேர்க்கடலையை 3 மணி நேரம் ஊறவிவும்.பிறகு, உப்பு சேர்த்து வேகவிடவும். மிளகாய், தனியா,கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பை வெறும் வாணலியில் வறுத்துப் பொடிக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி கடுகு, பெருங்காயத்தூள், கறிவேப்பில்லை தாளித்து, வெந்த வேர்க்கடலை, வறுத்துப் பொடித்த பொடியை சேர்த்துக் கிளறவும். கொத்தமல்லி, தேங்காய் துருவல் தூவி மேலும் சிறிது நேரம்  கிளறி இறக்கவும்.

8. மக்காச்சோள சுண்டல் 


என்னென்ன தேவை? 

மக்காச்சோளம்-ஒரு கப்,
கடுகு, உளுத்தம்பருப்பு,
சீரகம், பெருங்காயத்தூள்-தலா கால் டீஸ்பூன்,
கறிவேப்பில்லை- சிறிதளவு,
தேங்காய் துருவல்- 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய்,
உப்பு- தேவையான அளவு.

அரைக்க: 

இஞ்சி-சிறிய துண்டு,
பச்சை மிளகாய், பூண்டு பல்-தலா 2,
சோம்பு-கால் டீஸ்பூன்,
தேங்காய் துருவல்-2 டேபிள்ஸ்பூன்.

எப்படி செய்வது?

மக்காச் சோளத்தை 8 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு, குக்கரில் வேக வைகடகவும். அரைக்க கொடுத்துள்ளவற்றை அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, கடுகு,உளுத்தம்பருப்பு, சீரகம், பெருங்காயத்தூள், கறிவேப்பில்லை தாளித்து..வெந்த சோளம், அரைத்த மசாலா, உப்புச் சேர்த்து, தண்ணீர் தெளித்து நன்கு கிளறி விடவும். 2 நிமிடம் கழித்து தேங்காய் துருவல்தூவி இறக்கவும்.

9. சோயா பீன்ஸ் சுண்டல்

என்னென்ன தேவை?

வெள்ளை சோயா பீன்ஸ்-ஒரு கப்,
இஞ்சி-பூண்டு விழுது- ஒரு டீஸ்பூன்,
பட்டை-சிறிய துண்டு, கிராம்பு,
ஏலக்காய்-தலா ஓன்று,
மிளகாய்த்தூள்-1 டீஸ்பூன்,
தனியாத்தூள்-அரை டீஸ்பூன்,
கறிவேப்பில்லை, புதினா-சிறிதளவு,
தேங்காய் துருவல்-2 டேபிள்ஸ்பூன்,
உப்பு,எண்ணெய்- தேவையான அளவு.

எப்படி செய்வது?

சோயா பீன்ஸ் முதல் நாளே ஊற வைக்கவும். மறுநாள் குக்கரில் வேக வைக்கவும். கடாயில் எண்ணெயை சூடாக்கி, பட்டை, ஏலக்காய், கிராம்பு தாளித்து… கறிவேப்பில்லை, இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். வேக வைத்த சோயா பீன்ஸ், மிளகாய்த்தூள், தனியாத்தூள், உப்பு சேர்த்துக் கலந்து சிறிதளவு ணிசேர்த்துக் கலக்கவும். மசாலா நன்கு கலந்தவுடன் புதினா, தேங்காய் துருவல் சேர்த்துக் கிளறினால் சத்துமிக்க மசாலா சோயாபீன்ஸ் சுண்டல் ரெடி!

10. பச்சைப்பயறு சுண்டல்

என்னென்ன தேவை? 

முளைகட்டிய பச்சைப்பயறு-ஒரு கப்,
கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம்-தலா கால் டீஸ்பூன்,
இஞ்சித் துருவல்- 2 டேபிள் டீஸ்பூன்,
தேங்காய் துருவல்-2 டேபிள் ஸ்பூன்,
காய்ந்த மிளகாய் 3, கறிவேப்பில்லை- சிறிதளவு,
எண்ணெய், உப்பு-தேவையான அளவு.

எப்படி செய்வது?

முளைகட்டிய  பச்சைப்பயறை குக்கரில் வேக வைத்து எடுக்கவும் வாணலியில் எண்ணெயை சூடாக்கி… கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம் தாளித்து, காய்ந்த மிளகாய், இஞ்சித் துருவல், கறிவேப்பில்லை சேர்க்கவும். வேக வைத்த பயறு, உப்பு சேர்த்துக் கிளறி, தேங்காய் துருவல் சேர்த்து இறக்கவும். சத்தாடபச்சைப்பயிறு சுண்டல் ரெடி!

11. தக்காளி சோயா பீன்ஸ் சுண்டல்

என்னென்ன தேவை?  

சோயா பீன்ஸ்- ஒரு கப்,
தக்காளிச் சாறு-கால் கப்,
மிளகாய்தூள்-ஒரு டீஸ்பூன்,
சீரகம்- கால் டீஸ்பூன்,
கறிவேப்பில்லை, புதினா-சிறிதளவு,
தேங்காய் துருவல்-2 டேபிள்ஸ்பூன்,
எண்ணெய், உப்பு-தேவையான அளவு.

எப்படி செய்வது?

சோயா பீன்ஸை 10 மணி நேரம் ஊற வைத்து, பிறகு குக்கரில் வேகவிடவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி சீரகம், கறிவேப்பில்லை, புதினா தாளிக்கவும். தக்காளிச் சாறு, மிளகாய்த்தூள் சேர்த்து கொதிக்கவிடவும். இதில் வெந்த பீன்ஸ், உப்பு சேர்க்கவும். நன்கு கலந்து வந்ததும் தேங்காய் துருவல் தூவி  இறக்கவும். தக்காளி சுவையுடன் வித்தியாசமான சுண்டல் தயார்!

12. கோதுமை சுண்டல்

என்னென்ன தேவை? 

முளைகட்டிய கோதுமை- ஒரு கப்,
கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம்-தலா கால் டீஸ்பூன்,
கீறிய பச்சை மிளகாய்-2,
தக்காளி-ஒன்று(பொடியாக நறுக்கிக் கொள்ளவும்),
வெங்காயம்-ஒன்று(நறுக்கிக் கொள்ளவும்),
கறிவேப்பில்லை -சிறிதளவு,
எண்ணெய், உப்பு-தேவையான அளவு.

எப்படி செய்வது?

முளைகட்டிய கோதுமையை வேக வைக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம் தாளிக்கவும். தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சித் துருவல், கறிவேப்பில்லை சேர்த்துக் கிளறவும். வெந்த கோதுமை, உப்பு சேர்த்து, (விருப்பட்டால்) தேங்காய் துருவல் சேர்த்து இறக்கவும். டயாபடீஸ் உள்ளவர்களுக்கும் ஏற்ற சுண்டல் இது.

13. கறுப்பு உளுந்து சுண்டல்

என்னென்ன தேவை? 

கறுப்பு முழு உளுந்து-ஒரு கப்,
பச்சை மிளகாய்-2,
இஞ்சி-சிறிய துண்டு, சீரகம், கடுகு-தலா கால் டீஸ்பூன்,
கறிவேப்பில்லை-சிறிதளவு,
தேங்காய் துருவல்-3 டேபிள்ஸ்பூன்,
எண்ணெய், உப்பு-தேவையான அளவு.

எப்படி செய்வது?

இஞ்சி, பச்சை மிளகாய், சீரகத்தை அரைத்துக் கொள்ளவும். உளுந்தை 8 மணி  நேரம் ஊறவிடவும். பிறகு, குக்கரில் போட்டு வேக வைத்து எடுக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, கடுகு, கறிவேப்பில்லை தாளித்து வெந்த உளுந்து, அரைத்த இஞ்சி விழுது, உப்பு சோத்து நன்கு கிளறவும். பச்சை வாசனை போனதும், தேங்காய் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும். இந்த சுண்டல் இடுப்பு எலும்புக்கு பலம் தரும். பெண்களுக்கு ஏற்ற சத்தான சுண்டல் இது.

14. டிரை ஃப்ருட்ஸ் சுண்டல்

என்னென்ன தேவை? 

முளைகட்டிய பச்சைப் பயறு-ஒரு கப்,
நறுக்கிய பாதாம், முந்தரி, பிஸ்தா, உலர் திராட்சை-தலா ஒரு டேபிள்ஸ்பூன்,
தேங்காய் துருவல்-2 டேபிள்ஸ்பூன்,
பேரீச்சை-10,
உப்பு- தேவையான அளவு.

எப்படி செய்வது?

முளைகட்டிய பாசிப்பயறை உப்பு சேர்த்து, தண்ணீர் தெளித்து , ஆவியில் வேக வைக்கவும். வெந்த பயறுடன் முந்தரி, திராட்சை, பாதாம், பிஸ்தா, நறுக்கிய பேரீட்சை துண்டுகள் சேர்த்து நன்கு கலக்கவும். தேங்காய் துருவல் தூவி அலங்கரிக்கவும்.

15. பார்லி வேர்க்கடலை சுண்டல்

என்னென்ன தேவை? 

பார்லி-ஒரு கப்,
வறுத்த வேர்க்கடலை-அரை கப்,
சீரகம், சோம்பு-தலா கால் டீஸ்பூன்,
பச்சை மிளகாய்-2 நறுக்கிய கொத்தமல்லி-சிறிதளவு,
இஞ்சி துருவல்- அரை டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு-தேவையான அளவு.

எப்படி செய்வது?

ஒரு மணி நேரம் ஊற வைத்த பார்லி, வறுத்த வேர்க்கடலையை உப்பு சேர்த்து ஆவியில் வேக வைக்கவும். எண்ணெயை சூடாக்கி, சீரகம், சோம்பு,பச்சை மிளகாய் தாளிக்கவும். இதனுடன் இஞ்சித் துருவல், வெந்த பார்லி, வேர்க்கடலை சேர்க்கவும். நறுக்கிய கொத்தமல்லி,(விருப்பப்பட்டால்) தேங்காய் துருவல் சேர்க்கவும். கர்ப்பிணி பெண்களுக்கும், நீர் பிரியாமல் சிரமப்படுபவர்களுக்கும் ஏற்ற சுண்டல் இது.

About இனியவன்

x

Check Also

தொண்டையை பாதுகாக்க 10 வழிகள்

சளி, இருமலால் தொண்டையில் வலி, வறட்சி ஏற்படுவதைத் தொண்டைக் கட்டு என்கிறோம். தொண்டையை பாதுகாக்க 10 வழிமுறைகளை பார்க்கலாம். பேசிக்கொண்டே ...

%d bloggers like this: