Home / விளையாட்டுச் செய்திகள் / தோனி தொடர்ந்து அதே ‘கிளவ்ஸ்’ அணிந்து களமிறங்க ஐ.சி.சி., அனுமதி மறுத்து விட்டது.

தோனி தொடர்ந்து அதே ‘கிளவ்ஸ்’ அணிந்து களமிறங்க ஐ.சி.சி., அனுமதி மறுத்து விட்டது.

தோனி தொடர்ந்து அதே ‘கிளவ்ஸ்’ அணிந்து களமிறங்க ஐ.சி.சி., அனுமதி மறுத்து விட்டது.

இந்தியா, தென் ஆப்ரிக்க அணிகள் மோதிய உலக கோப்பை லீக் போட்டி இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டனில் நடந்தது. தோனி விக்கெட் கீப்பிங் செய்த போது ‘கிளவ்சில்’ துணை ராணுவப் படையினர் பயன்படுத்தும் லோகோ பொறிக்கப்பட்டு இருந்தது.

வீரர்களின் தியாகத்தை குறிக்கும் வகையிலான இந்த முத்திரையை ராணுவ கமாண்டோக்கள் மட்டும் தான் பயன்படுத்துவர். தோனி 2011 முதல், பாராசூட் பிரிவில் கவுரவ லெப்டினென்ட் ஆக உள்ளார். 2015ல் இதற்காக பயிற்சியில் ஈடுபட்டார்.

இதை நினைவுபடுத்தும் வகையில் தோனி அணிந்ததால், சமூக வலைத்தளங்களில் இவரது தேசப்பற்றை பலரும் பாராட்டி வருகின்றனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) விதிப்படி,‘வீரர்கள் அணியும் ஆடை, பயன்படுத்தும் பொருட்கள் (ஜெர்சி, கிளவ்ஸ் உட்பட) அரசியல், மதம் மற்றும் இன உணர்வுகளை துாண்டும் வகையில் இருக்கக் கூடாது,’ என தெரிவித்து, சம்பந்தப்பட்ட லோகோவை தோனி நீக்க வேண்டும் என, இந்திய கிரிக்கெட் போர்டிடம் (பி.சி.சி.ஐ.,) கேட்டுக் கொண்டது. இவ்விஷயத்தில் தோனிக்கு ஆதரவாக பி.சி.சி.ஐ., களமிறங்கியது. பி.சி.சி.ஐ.,யின் கிரிக்கெட் நிர்வாக குழு தலைவர் வினோத் ராய் கூறியது: தோனி ‘கிளவ்சில்’ உள்ள லோகோவை எடுக்க வேண்டும் என ஐ.சி.சி., கேட்டுக் கொண்டது. இந்த விஷயத்தில் வர்த்தகம் அல்லது மதம் சம்பந்தமான எதுவும் இருப்பதாக எங்களுக்குத் தெரியவில்லை. சம்பந்தப்பட்ட லோகோ, துணை ராணுவத்தின் முத்திரை அல்ல. தோனியை பொறுத்தவரையில் ஐ.சி.சி., விதிகளை மீறவில்லை. இதுகுறித்து ஐ.சி.சி.,க்கு முறைப்படி ஏற்கனவே கடிதம் அனுப்பி விட்டோம். ஆஸ்திரேலிய போட்டிக்கு முன் பி.சி.சி.ஐ., தலைமை அதிகாரி ராகுல் ஜோரி, ஐ.சி.சி., நிர்வாகிகளிடம் பேசி விடுவார். இவ்வாறு அவர் கூறினார்.

 

About இனியவன்

x

Check Also

இந்திய அணியை எங்களால் காப்பி அடிக்கவும் முடியாது, அவர்களைப் போல் விளையாடவும் முடியாது, எங்களுக்கு இருக்கும் வரம்புமுறை அடிப்படையில்தான் விளையாட முடியும் என்று இலங்கை அணியின் கேப்டன்

இந்திய அணியை எங்களால் காப்பி அடிக்கவும் முடியாது, அவர்களைப் போல் விளையாடவும் முடியாது, எங்களுக்கு இருக்கும் வரம்புமுறை  அடிப்படையில்தான் விளையாட ...

%d bloggers like this: