Home / உள்நாட்டு செய்திகள் / தோட்டத் தொழிலார்களின் நாளாந்த குறைந்த வேதனம் ஆயிரம் ரூபா-ஜனாதிபதி

தோட்டத் தொழிலார்களின் நாளாந்த குறைந்த வேதனம் ஆயிரம் ரூபா-ஜனாதிபதி

மார்ச் மாதம் 01ஆம் திகதி முதல் தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த குறைந்த வேதனம் ஆயிரம் ரூபாவாக இருக்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தீர்மானித்துள்ளார்.

இதனுடன் இணைந்ததாக உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட தோட்டத் துறையின் அனைத்து பகுதிகளையும் துரிதமாக அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி அவர்கள் பணிப்புரை விடுத்துள்ளார்.

தேயிலை தொழிற்துறையின் தரத்தையும் வினைத்திறனையும் மேம்படுத்துவதற்கு அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள வரி விலக்கு, உர மானியம் உள்ளிட்ட பல்வேறு நிவாரணங்கள் அதில் உள்ளடங்கும். இந்த நிவாரணங்கள் பெருந்தோட்ட கம்பனிகளுக்கே கிடைப்பதால் அதன் நன்மைகளை தோட்டத் தொழிலாளர்களுக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும் என ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்.

உற்பத்தி மற்றும் கைத்தொழிற் துறை அடையும் முன்னேற்றத்துடன் இணைந்ததாக அதன் நன்மைகள் தொழிலாளர்களுக்கும் கிடைக்கச் செய்வது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் என ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

 

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | நாடுமுழுவதும் உள்ள மதுபான சாலைகளுக்கு பூட்டு

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபான சாலைகளும் நாளை (புதன்கிழமை) மற்றும் நாளை மறுதினமும் மூடப்படும் என மதுவரி திணைக்களம் ...