ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறக் கூடிய தகுதியான வேட்பாளரை தமது கட்சி நிறுத்தும் என ஐ.தே.கவின் தேசிய அமைப்பாளரான அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.
வலப்பனையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றிய அமைச்சர், ஐக்கிய தேசியக் கட்சி என்பது ஒரு குடும்பத்துக்கு மட்டுமே உரித்தான கட்சியல்ல என சுட்டிக்காட்டினார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்-
2019 ஆம் ஆண்டு பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் ஆண்டாகும். இந்த ஆண்டுக்குள் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட்டு, அடுத்த ஆண்டின் ஆரம்பத்தில் புதிய ஜனாதிபதி ஒருவர் பதவியேற்பார்.
நாட்டில் அதிகார போராட்டம் நடக்கின்றது. சதித்திட்டங்கள் தீட்டப்படுகின்றன. ஆனாலும் ஐக்கிய தேசியக் கட்சி மிகவும் வலுவாக உள்ளது. எமது கட்சியில் வெற்றிபெறக் கூடிய வேட்பாளர்கள் இருக்கின்றனர். எமது கட்சியில் இருப்பவர்கள் நாட்டின் நலன்களுக்காவே பணிகளை செய்வார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.#
மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்
LIKE-Facebook