Home / உள்நாட்டு செய்திகள் / தேயிலைத் தொழிலாளர்களின் சம்பள பிரச்சினைகள் சார்ந்த விடயங்களை கண்டறிய குழு

தேயிலைத் தொழிலாளர்களின் சம்பள பிரச்சினைகள் சார்ந்த விடயங்களை கண்டறிய குழு

தேயிலைத் துறையில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை உள்ளிட்ட தேயிலைத் துறை சார்ந்த குறுங்கால மற்றும் நெடுங்கால பிரச்சினைகளை கண்டறிந்து அவற்றுக்கான தீர்வுகளை முன்மொழிவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட குழுவொன்றை நியமித்துள்ளார்.

தேயிலைத் துறையில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்களின் சம்பள பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே ஜனாதிபதியால் இந்தக் குழு நியமிக்கப்பட்டது.

ஜனாதிபதி ஆளணி பிரதானி எச்.எம்.பீ.ஹிட்டிசேகர, பெருந்தோட்ட கைத்தொழிற்துறை அமைச்சின் செயலாளர் ஜே.ஏ.ரஞ்சித், தொழில் அமைச்சின் செயலாளர் ஆர்.பி.ஆர்.ராஜபக்ஷ, திறைசேரி செயலாளர் கலாநிதி ஆர்.எச்.எஸ்.சமரதுங்க, இலங்கை தேயிலை சபையின் தலைவர் டபிள்யு.எல்.பி.விஜேவர்தன, தொழில் ஆணையாளர் நாயகம் ஜே.விமலவீர, சிறுதேயிலை தோட்ட அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ஆகியோரும் இலங்கை பெருந்தோட்ட சங்கம், இலங்கை தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கம், இலங்கை தேயிலை தரகர்கள் சங்கம், தேயிலை ஏற்றுமதியாளர்கள் சங்கம் ஆகியவற்றை சார்ந்த ஒரு பிரதிநிதி வீதம் இக்குழுவில் உள்ளடக்கப்பட்டடுள்ளன.

தேயிலைத் துறையில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குதல், அதன் அபிவிருத்திக்காக மேற்கொள்ள வேண்டிய துரித நடவடிக்கைகளை செயற்படுத்துதல் மற்றும் இத்துறையில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்களின் நலன்புரி நடவடிக்கைகளை மேம்படுத்தும் நோக்கங்களுக்காக இக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.

ஒரு மாத காலத்திற்குள் குறித்த குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது.

ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனவிரத்ன, குறித்த அமைச்சுக்களின் செயலாளர்கள், அரச அதிகாரிகள், பிரபல கிரிக்கற் வீரரான முத்தையா முரளிதரன், தேயிலை துறை சார்ந்த சங்கங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட குழுவினர் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

LIKE-Facebook

 

About அகமுகிலன்

x

Check Also

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பாதுகாப்பு சோதனைக்கு தன்னியக்க இயந்திரம்!!

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்துக்கு வருபவர்களை பாதுகாப்புக்கா சோதனை செய்வதற்கு தன்னியக்க இயந்திரம் ஆலயத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. வடக்கு மாகாண ...

%d bloggers like this: