Home / உள்நாட்டு செய்திகள் / தென்னிலங்கை மீனவர்களை வெளியேற்றுமாறு யாழில் பேரணி

தென்னிலங்கை மீனவர்களை வெளியேற்றுமாறு யாழில் பேரணி

வடமராட்சி கிழக்கில் அத்துமீறி சட்ட விரோத தொழிலில் ஈடுபட்டு வருகின்ற தென்னிலங்கை மீனவர்களை வெளியேற்றக் கோரி மாபெரும் பேரணியொன்று யாழில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் சங்கங்களின் சமாசத்தின் ஏற்பாட்டில் இன்று காலை இப் பேரணி நடைபெற்றது.

யாழ் பிரதான வீதியிலுள்ள சமாச முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட இப் பேரணி பிரதான வீதுயூடாக யாழ் மாவட்டச் செயலகத்தை சென்று நிறைவடைந்தது.

பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கே மேலும் பாதிப்பை ஏற்படுத்துகின்ற தெற்கு மீனவர்களை உடனடியாக வெளியேற்ற வேண்டுமெனக் கோரி மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜரொன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.

 

About இனியவன்

x

Check Also

வெல்லம்பிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு இடமாற்றம்

வெல்லம்பிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உடன் அமுலுக்குவரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியின் பேரில் இந்த இடமாற்றம் ...

%d bloggers like this: